ஒருவருக்கு வாட்ச்.. இன்னொருவருக்கு அடுக்குமொழி.. யாரை கிண்டல் செய்கிறார் அன்புமணி ராமதாஸ்?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: பாமக பொதுக்குழு கூட்டத்தில் நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை அன்புமணி ராமதாஸ் மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஒரு கட்சியின் தலைவர் வாட்ச் காட்டுவதாகவும், ஒரு கட்சியின் தலைவர் அடுக்குமொழியில் பேசுவதாகவும் விமர்சித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் சில கட்சிகள் விளம்பர அரசியல் மட்டுமே செய்வதாகவும், பேச்சில் மட்டுமே சத்தம் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், ''2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023-ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு, ஆன்லைன் ரம்மிக்கு தடை உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 அன்புமணி ராமதாஸ் பேச்சு

அன்புமணி ராமதாஸ் பேச்சு

இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மறைமுகமாக விமர்சித்தார். அன்புமணி ராமஸ்தாஸ் பேசுகையில், தமிழ்நாட்டில் பாமகவிற்கு ஏற்ப களம் தயாராக இருக்கிறது. மற்ற கட்சிகளை பார்த்தால், களைந்து, பிரிந்து, உடைந்து, தேய்ந்து போய் இருக்கும் சூழல் நிலவி வருகிறது.

விளம்பர அரசியல்

விளம்பர அரசியல்

பாமக மட்டுமே வேகமாக நடந்து வருகிறது. சில கட்சிகள் விளம்பர அரசியல் செய்கிறார்கள். சில கட்சிகளின் பேச்சில் சத்தம் மட்டுமே வருகிறது. உள்ளே ஒன்றுமில்லை. எந்த கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கும் தெரியாது, மற்றவர்களுக்கும் தெரியாது. ஆனால் செய்தி வரவேண்டும் என்று பேசுகிறார்.

"வாட்ச்" காட்டும் தலைவர்

ஆனால் பாமக நிதானமாகவும், வலுவாகவும் முன்னேறி வருகிறது. சிலர் என்னிடம் மற்ற கட்சிகளை பற்றி பேசுவார்கள். ஒருவர் வாட்ச் எல்லாம் காட்டுகிறார் என்று சொல்வார்கள். இன்னொருவர் அடுக்குமொழியில் பேசுகிறார் என்பார்கள். அதெல்லாம் நமக்கு வராது. அது தேவையும் இல்லை. எப்போதும் நாம் வளர்ச்சியை நோக்கியே செல்கிறோம்.

பாமகவுக்கு அங்கீகாரம்

பாமகவுக்கு அங்கீகாரம்

நமக்கான அங்கீகாரம் வந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு வேறு வழியில்லை. 55 ஆண்டுகாலம் இரு கட்சிகள் ஆட்சிசெய்து, மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மட்டுமே இது நமக்கேற்ப சூழல் என்று கூறினேன். அதிமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு பாமக மட்டுமே இருக்கிறது. மீதமுள்ள கட்சிகளிடம் வெறும் சத்தம் மட்டுமே உள்ளது என்று விமர்சித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+