நான் அமைப்பதே பாமக கூட்டணி.. அன்புமணிக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.. ராமதாஸ் ஆவேசம்!
விழுப்புரம்: பாமகவில் இல்லாத அன்புமணி, எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சு என்ற கூத்தை அரங்கேற்றி இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கு மக்கள் யாரும் ஓட்டு போட மாட்டார்கள் என்று கூறிய ராமதாஸ், பாமகவின் கூட்டணியை நானே முடிவு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைவதாக நேற்று அன்புமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்து அறிவித்தனர். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் அளிக்க அதிமுக ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ராமதாஸ் தரப்பு பாமக குறித்த கேள்விகளுக்கு இருவருமே பதில் அளிக்கவில்லை.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அன்புமணி கூட்டம் ஒப்பந்தம் போட்டாரா, கையெழுத்து போட்டாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் தொடங்கிய கட்சியை யாரும் உரிமை கொண்டாட தகுதியில்லை. அன்புமணி எனக்கே வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்பே தெரியவில்லை.
இந்திய அளவில் அங்கீகாரம் பெறும் அளவிற்கு பாமகவை வளர்த்திருக்கிறேன். கடும் எதிர்ப்பை மீறித்தான் அன்புமணியை கட்சியில் சேர்த்து மத்திய அமைச்சராக்கினேன். தற்போது அன்புமணி செய்த தில்லு முல்லு காரணமாகவே பாமகவில் இருந்து நீக்கினேன். என்னிடம் இருந்து கட்சியை பறிப்பதற்கு சதித்திட்டம் தீட்டி சூழ்ச்சியோடு அன்புமணி செயல்படுவதை மக்கள் அறிவார்கள்.
அன்புமணிக்கு கொஞ்சம் கூட தலைமைப் பண்பு இல்லை. பாமக என்னிடம் மட்டும்தான் உள்ளது. ஒரு நபர், ஒரு கட்சியோடு பேசி கூட்டணி அமைத்துள்ளார். பாமக தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள். சிலர் மட்டும் பணம், பதவிக்காக அன்புமணியிடம் சென்றுள்ளனர். பணம் கொடுப்பார் என்பதற்காக அன்புமணியுடன் படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். தந்தைக்கே துரோகம் செய்த அன்புமணி கும்பலுக்கா வாக்களிக்க வேண்டும் என மக்கள் நினைப்பார்கள். அன்புமணி எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பாகும். என் தலைமையில் தான் கூட்டணி பேச முடியும். நான் அமைப்பதே பாமக கூட்டணி.. நான் சேரும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.
அன்புமணி - எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேச்சு என்ற பெயரில் கூத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்று விமர்சித்தார். அதிமுக - பாமக கூட்டணியை ராமதாஸ் நிராகரித்திருக்கும் சூழலில், ராமதாஸ் தரப்பு எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை வரும் நாட்களில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications