கெஞ்சிய எடப்பாடி.. விட்டுக் கொடுத்த ஓபிஎஸ்! ஈரோடு எலக்சன் ’சீக்ரெட்’ போன் கால்! போட்டுடைத்த அண்ணாமலை
விழுப்புரம்: ஈரோடு இடைத் தேர்தலின் போது, அது தனது தாயாரின் ஊர், தான் பிறந்த ஊர் என்பதால் அதிமுக போட்டியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்பியதாகவும், இது தொடர்பாக தன்னிடம் பேசி ஓ.பன்னீர்செல்வத்தை போட்டியிட வேண்டாம் என சொல்லுங்கள் என கூறியதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.
விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை சாமி தரிசனம் செய்துவிட்டு திருவாமாத்தூர் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து மாம்பழ சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் செய்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அண்ணாமலை.
அப்போது பேசிய அவர்," அதிமுகவின் சில தலைவர்கள் அதிமுக என்கின்ற அற்புதமான கட்சியை சில அதிமுக தலைவர்கள் தங்களுடைய சுயலாபத்திற்காக அழித்து கொண்டுள்ளனர். அதிகார வெறிக்காக அதிமுகவை அழித்துக் கொண்டுள்ளனர். அதனை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர். தொண்டர்கள் அனைவரும் மாற்றுக் கட்சிக்கு படையெடுத்து கொண்டு உள்ளனர். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியை நோக்கி பெருமளவில் வரத் தொடங்கியுள்ளனர்.
சுய லாபத்திற்காக பாரதிய ஜனதா கட்சி வேண்டாம் என ஒதுங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. அதற்காக மக்கள் பாடம் புகட்டினார்கள். பல இடங்களில் அதிமுகவின் டெபாசிட் இழக்க வைத்தனர். தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் இவ்வளவு பெரிய ஒரு கட்சி டெபாசிட் இழப்பில் கின்னஸ் ரெக்கார்டு செய்துள்ளது. அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும் கூட தலைவர்கள் நன்றாக இல்லை. அதற்கான தண்டனையை மக்கள் இப்பொழுது அளித்துள்ளனர்.
இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எனக்கு அறிவுரை கூறுகிறார். எனது கட்சிக்கு அவர் அறிவுரை கூற தேவையில்லை. அதிமுக கட்சி கண் முன்னே கரைந்து கொண்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் மூன்றாவது நான்காவது இடத்தில் வந்துள்ளனர் எடப்பாடி பழனிச்சாமி. அவர்கள் கண்ணாடி எடுத்து அவரது முகத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக பார்த்தால் கண்ணாடி எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிவுரை கூறும். எடப்பாடியின் சரித்திரம் அனைவருக்கும் தெரியும் பாஜகவை பற்றி தவறாக பேசியதற்கு பாஜகவின் மாநில தலைவர் என்ற அடிப்படையில் நாங்கள் பதிலடி தர வேண்டும்.
2021 ஈரோடு பை லக்சன் சீக்ரெட் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈரோடு எனது சொந்த ஊர், எனது தாயாரின் ஊர், இந்த இந்த ஊரில் நான் பிறந்தேன். அப்படி என கூறிவிட்டு ஈரோடு இடைத்தேர்தலில் நின்றார். கண்ணியமாக கம்பீரமாக ஓபிஎஸ் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசாமல் இந்த கட்சியின் தொண்டர்கள் எல்லாம் ஒன்றாக ஓட்டு பட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர் ஒதுங்கி நின்றார். அதற்கென்ன மரியாதை அவர் கொடுத்தார்.
இப்படி சொல்லித்தான் ஈரோடு இடைத்தேர்தலில் நின்றார். எத்தனை வாக்கு வித்தியாசத்தில் தோற்றார் ஆயிரம் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுவிட்டு உண்மை தெரிந்தும் திருத்தி பேசுகிறார் என எடப்பாடி சொல்லியதை நான் கண்டிக்கிறேன். என்னுடைய கண்டனத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் புறக்கணிப்பதற்கான காரணம் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் குளறுபடி நடந்தது. அதேபோன்று குளறுபடி இங்கேயும் நடக்கும் என இன்றைக்கு ஒரு பொய்யை செல்கிறார்.. இதேபோன்று நடத்தும் 2026 சட்டமன்ற தேர்தலையும் இவர் இதே போன்று புறக்கணிப்பாரா?" என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications