Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடுகள் பத்திரம்.. அர்த்தராத்திரி திடீர்னு கத்திய நாய்.. விழுப்புரத்தில் திருதிருனு விழித்த நாலு பேர்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் விவசாயி மணி என்பவர் வீட்டில் நடந்த சம்பவம், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இன்று அதிகாலை நடந்த இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக 4 பேர் கைதாகி, அவர்களிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கால்நடை திருட்டுகள் அதிகமாகி வருகின்றன.. முக்கியமாக, ஆடுகளை குறி வைத்து நடக்கும் திருட்டு பெருகி வருகிறது. இதற்கு காரணம், ஒரு ஆடு ரூ.1000-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் ஆடுகளுக்கான கிராக்கியும் பெருகியபடியே உள்ளதால், விவசாயிகள் பலர் ஆடுகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

villupuram vizhupuram theft

அதுமட்டுமல்லாமல், பருவமழை சொதப்பிவிடுவதால், கால்நடைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதாயிருக்கிறது. எனவே தங்கள் வாழ்வாதாரத்துக்காகவே ஆடுகளை வளர்ப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

மேய்ச்சல் ஆடுகள்: ஆனால், இந்த ஆடுகளையும் குறிவைத்து மர்மநபர்கள் திருடி சென்றுவிடுகின்றனர்.. கிராமப்பகுதி வீடுகளில் ஆட்டுக் கிடைகளிலும், வயல்வெளியில் மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளையும், சில மர்ம கும்பல்கள் அவ்வப்போது நோட்டமிட்டு, நள்ளிரவில் திருடிவிடுகிறார்கள். இந்த ஆடுகளை கொண்டு செல்வதற்காகவே டெம்பா, அல்லது மிகப்பெரிய கார்களை கொண்டுவந்து அதில் ஆடுகளை கடத்தி விடுகிறார்கள். சிலசமயம், ஆடுகளின் உரிமையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது..

சிலசமயம், ஆடுகளை திருட இடையூறாக உள்ள உரிமையாளர்கள் கொடூரமாக கொல்லப்பட்டும் விடுகிறார்கள். ஆடுகளை திருடுவதற்காக நடக்கும் வன்முறை சம்பவங்களை கண்டு விவசாயிகள் கலங்கி போய் உள்ளதால், இதுகுறித்த நடவடிக்கை வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் ஆங்காங்கே காவல்துறையிடம் முறையிட்டும் வருகிறார்கள்.

விழுப்புரம்: இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.. திண்டிவனம் அருகே உள்ள ஊரல் கிராமத்தில் மணி என்ற 57 வயது விவசாயி வசித்து வருகிறார்.. இவர் தன்னுடைய வீட்டில் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்றைய தினம், வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து விட்டு, வீட்டுக்கு பக்கத்திலேயே ஆடுகளை கட்டி வைத்துள்ளார்.. இன்று விடிகாலை 3.30 மணிக்கு திடீரென நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது.

டூவீலர்கள்: இதனால் கண்விழித்த மணி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்பொழுது 4 மர்ம நபர்கள் ஆடுகளை, டூவீலர்களில் ஏற்ற முயன்று கொண்டிருந்ததை கண்டு, மணி அதிர்ச்சி அடைந்தார்.. உடனடியாக கத்தி கூச்சலிடவும், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.. ஆடுகளை திருடி வைத்து கொண்டிருந்த 4 நபர்களை, சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். பிறகு திண்டிவனம் ரோசனை போலீசுக்கும் தகவல் தந்தனர்.

போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், ஜெகநாத் (18), அர்ஜுன் (19), ஜாசிம் பாஷா 19 உள்ளிட்ட 4 பேரும் ஆடுகளை திருட வந்ததை ஒப்புக் கொண்டனர். 20 வயதுகூட நிரம்பாத இந்த 4 பேரும், நீண்ட காலமாகவே திண்டிவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.

வெள்ளாடுகள்: திருடி கொண்டு செல்வதற்காக, டூவீலரில் ஏற்றி தயாராக வைத்திருந்த 7 வெள்ளாடுகளையும் போலீசார் பறிமுதல் செய்து, மணியிடம் ஒப்படைத்தனர்.. அத்துடன் 2 டூவீலரையும் கைப்பற்றி, ஆடு திருடிய 4 பேரையும் ஜெயிலில் அடைத்துள்ளனர். நாய் கத்தியதால், ஆடு திருட வந்து இப்படி மொத்த திருடர்களும் மாட்டிக் கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+