Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கூசுதே".. அன்பு ஆசிரம ஓனரின் மிட்நைட் "அக்கப்போர்".. தப்புன்னு சொன்னேனே.. குமுறும் பெண்.. தோழி வேற

விழுப்புரம் அருகே அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தின் ஓனர் அன்பு ஜூபின் தற்போது கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் ஆசிரமத்தில் ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கான சிகிச்சையும் நடந்து வருகிறது.. இந்நிலையில், அங்கு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர, போலீசில் கூறியதாக சில தகவல்களும் வெளியாகி வருகின்றன.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் இயங்கி வருகிறது.. இங்கு மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆசிரமத்தின் பிரதான பணி என்னவென்றால், சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோரை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

 மாயமோ மாயம்

மாயமோ மாயம்

இந்த ஆசிரமத்தின் ஓனர் பெயர் ஜூபின் பேபி.. 45 வயதாகிறது.. இவர் கேரளாவை சேர்ந்தவர்.. இந்த ஆசிரமத்தில் திருப்பூரை சேர்ந்த ஜாபருல்லா என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. ஒருநாள் திடீரென மாயமானார்... இவரை காணோம் என்று அவரது உறவினர்கள், சென்னை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு கொண்டுசென்றதால்தான், இந்த ஆசிரமத்தை பற்றின விஷயமே வெளியே தெரியவந்துள்ளது.. சென்னை ஐகோர்ட் உத்தரவு படி, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் கடந்த 10ம் தேதி, ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, பணியாளர்கள் 27 பேர் உள்பட சுமார் 150 பேர் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

 தனித்தனி புகார்கள்

தனித்தனி புகார்கள்

விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை மற்றும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு மற்றும் கெடார், ஆசிரமத்தில் தங்கியிருந்த கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரும் தனித்தனியே புகார் அளித்ததன் பேரில், ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியாஜூபின், மேனேஜர் விஜி மோகன், பணியாளர்கள் அய்யப்பன், கோபிநாத், முத்துமாரி, ஆகியோர் மீது 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில், மேலாளர் விஜி மோகன், ஊழியர்கள் அய்யப்பன், கோபிநாத், முத்துமாரி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

 வளர்ப்பு குரங்குகள்

வளர்ப்பு குரங்குகள்

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி குரங்கு கடித்ததால் காயம் அடைந்ததாக கூறி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்... அதேபோல் அவரது மனைவி மரியாஜூபின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்... இதனால் இவர்கள் 2 பேரையும் உடனடியாக கைது செய்ய முடியாமல் போனது.. இறுதியில் மரியாஜூபின் உட்பட பூபாலன், சதீஷ், தாஸ் ஆகிய 4 பேரும் கைதானார்கள்.. ஜூபின்பேபி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்..

 திடீர் மாயம்

திடீர் மாயம்

நேற்றுமுன்தினம் போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது வார்டில் இருந்து வெளியே வந்த ஜூபின்பேபி அங்கிருந்த போலீசாரிடம், "முடிந்தால் என்னை கைது செய்யுங்கள், என் மீது எந்த தவறும் இல்லை" என்று கடுமையான வாக்குவாதம் செய்தார்.. பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்.. இப்போதைக்கு வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இவருக்கு இன்னும் சிகிச்சை நடக்கிறது.. இந்த சிகிச்சை முடிந்துவந்தால்தான், காணாமல் போன ஜாபருல்லா பற்றி தெரியவரும் என்கிறார்கள் போலீசார். பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர், முதியோர்கள், ஒரு ஆண் குழந்தை உள்பட 109 ஆண்கள், 33 பெண்கள் என்று மொத்தம் 142 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்..

 திடீர் மாயம்

திடீர் மாயம்

ஆசிரமத்தில் இன்னும் சிலர் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, ஆசிரமத்தை சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறார்கள். இந்த ஆசிரமத்தின் இன்னொரு பிராஞ்ச் பெங்களூருவில் இயங்கி வரும்நிலையில், அங்கேயும் சிலர் மாயமாகி இருக்கிறார்களாம்.. ஆனால், பெங்களூரு ஆசிரமம் தரப்பில் இந்த தகவலை மறுத்து வருகிறார்கள்... இதனிடையே, விழுப்புரம் அன்பு ஆசிரமத்தில் தங்கியிருந்த வடமாநில பெண் ஒருவர், தான் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக வாக்குமூலம் தந்துள்ளார்..

 தனிரூமில் சித்ரவதை

தனிரூமில் சித்ரவதை

அதில், "என் கணவரை விட்டுவிட்டு 8 வருடங்களுக்கு முன்பு தமிழகம் வந்துவிட்டேன். இங்கு ஊர் ஊராக சுற்றி திரிந்த போது, கடந்த 2019ம் ஆண்டு விழுப்புரம் வந்தேன். அப்போது அங்கு வந்த யாரோ ஒருவர் அடைக்கலமின்றி தனியாக இருப்பதை கவனித்து அன்பு ஜோதி ஆசிரமத்தில் விட்டு சென்றார்.. ஆசிரமத்தில் சமைக்கும் வேலைகளை செய்வேன்.. வேலை செய்ய தாமதமானால் ஆசிரமத்தின் ஓனர் ஜூபின் மற்றும் அவரது மனைவி மரியாவும், அங்கு வேலை செய்பவர்களுடன் சேர்ந்து என்னை தனி அறையில் பூட்டி வைத்து அடித்து துன்புறுத்துவார்கள்..

 வன்கொடுமை

வன்கொடுமை

இப்படித்தான், கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி ஆசிரமத்தில் இருந்து புதுச்சேரிக்கு வலுக்கட்டாயமாக என்னை அழைத்து சென்றார் ஜூபின் பேபி.. நடுராத்திரி என்னை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தினார். நான் வேண்டாம், இது தப்பு என்று தெரிவித்தேன். ஆனால், அவர் எனது கன்னத்தில் மாறிமாறி முத்தங்கள் கொடுத்து என்னை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டு, பலாத்காரம் செய்தார். மறுநாள் குண்டலப்புலியூருக்கு அழைத்து வந்துவிட்டனர்., இது குறித்து என்னுடைய ஆசிரம தோழியிடம் சொன்னேன்.. அவரையும் 5 முறை ஜூபின் பேபி வன்கொடுமை செய்ததாக என்னிடம் சொன்னார்.. இதனால், நாங்கள் 2 பேரும் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தோம்.. அந்த நேரம் பார்த்து, ஜூபின் பேபி குடும்பத்தினருடன் ஊருக்கு சென்றிருந்தார்..

 ஷாக்கிங்

ஷாக்கிங்

உடனே நாங்கள் 2 பேரும் அந்த நேரத்தை பயன்படுத்தி அங்கிருந்து தப்பி கோவைக்கு சென்றுவிட்டோம்.. ஆனால், ஊரில் இருந்து திரும்பிய ஜூபின் பேபி, எங்கள் 2 பேரையும் கண்டுபிடித்து மீண்டும் ஆசிரமத்திற்கே அழைத்து சென்றுவிட்டனர்.. நாங்கள் மறுபடியும் தப்பிக்காமல் இருக்கவே அவர்கள் வளர்க்கும் குரங்குகளை எங்கள் மீது ஏவி கடிக்கவிட்டனர்" என்றார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜூபின் பேபி மற்றும் அவரது மனைவி, மேலும் ஆசிரம பணியாளர்கள் என்று 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.

16 பேர் கதி என்ன?

16 பேர் கதி என்ன?

இதனிடையே, 16 பேர் மாயமான சம்பவம் விஸ்வரூபமெடுத்துள்ளது.. இந்த ஆசிரமத்தில் குரங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆசிரமத்தில் இருந்தவர்களை குரங்குகள் கடித்து குதறி வருகிறது என்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குரங்குகளை வைத்து கொடூரம் செய்வதாகவும் தகவல் பரவுகிறது. அப்படி குரங்குகளால் கடித்து தாக்கப்பட்டு அந்த 16 பேரும் உயிர் இழந்திருப்பார்களா என்ற சந்தேகம் கடந்த 2 நாட்களாகவே வட்டமடித்தது. ஆனால், இப்போது, அவர்கள் உடல் உறுப்புகளை திருடுவதற்காக கடத்தப்பட்டார்களா? என்ற அச்சமும் எழுந்து பரபரப்பை கிளப்பி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+