விழுப்புரத்துக்கு "சைஸா" வந்த விருந்தாளி.. மரக்காணம் பீச்சில் மிட்நைட்டில் ஐயோ.. காலையில பார்த்தால்?
விழுப்புரம்: விழுப்புரம் மரக்காணம் கடற்கரை சம்பவம் பெருத்த அதிர்ச்சியை மீனவ மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது?
விழுப்புரம் அருகே மரக்காணம் கடற்கரையில் 2 ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கிடந்தது உயிரின ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆமைகள்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடற்கரை உள்ளது. இந்த பகுதிக்கு வருடந்தோறும் 100-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம். அதாவது டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை, கடல் ஆமைகள் கடலில் இருந்து வெளியே வந்து, கடற்கரை பகுதியில் பள்ளம் தோண்டி முட்டையிட்டு செல்லும்..
இதுபோல் ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினர் எடுத்து, அவைகளை பாதுகாத்து ஆமைக்குஞ்சுகள் பொறிந்ததுமே, அவைகளை கடலில் கொண்டுபோய் பாதுகாப்பாக விடுகின்றனர். அதில் சில ஆமை குஞ்சுகள் இறந்து விடுவதும் அவ்வப்போது நடந்துவிடுகிறது.
மீனவர்கள்: ஆமைகள் முட்டையிடும் பகுதிகள் என்னென்னவென்பதை, மீனவர்களின் உதவியுடன் வனத்துறையினர் கண்டறிந்து, அந்த முட்டைகளை சேமித்து வைப்பார்கள்.. வசவன்குப்பத்தில் செயற்கையான முறையில் இதற்காகவே உருவாக்கப்பட்ட பொறிப்பகத்தில் வைத்து அந்த முட்டைகளை பாதுகாப்பார்கள். தொடர்ந்து 45 நாட்களுக்கு பிறகு முட்டை பொறிந்ததும், அவைகள் எல்லாம் ஆமை குஞ்சுகளாக மாறியதும், அவற்றை கடலில் கொண்டுபோய் பத்திரமாக விட்டு விடுவார்கள்.
பொதுவாக, கடல் ஆமைகள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.. அதனால்தான், இந்த ஆமை இனங்களை அழியாமல் பாதுகாக்க நம்முடைய தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடற்கரை பகுதிகள்: தற்போது ஆமைகளின் இனப்பெருக்க காலம் நடந்து கொண்டிருக்கிறது.. அதன்படியே, ஆமைகளும் முட்டையிட்டு வருகின்றன.. அப்படித்தான், முட்டையிடுவதற்காக நேற்றிரவு சுமார் 50 கிலோ எடையுள்ள 2 கடல் ஆமைகள், எக்கியார் குப்பம் கடற்கரை பகுதிக்கு வந்துள்ளன... இந்த 2 ஆமைகளும் கடற்கரையில், குழி தோண்டி முட்டையிட சென்றதாகவும் தெரிகிறது.
ஆனால் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.. இன்று காலை அந்த 2 ஆமைகளுமே செத்து கிடந்தனவாம்.. கடற்கரையில் அந்த பகுதிக்கு சென்ற சிலர், ஆமைகள் செத்துக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. செத்துக் கிடந்த ஆமைகளின் பக்கத்தில் முட்டையும் சிதறி கிடந்ததாம்.. இறந்துபோன ஆமைகள் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் என்கிறார்கள்..
என்ன காரணம்: எப்படி ஆமைகள் இறந்தன என்றே தெரியவில்லை.. யாராவது அடித்து கொன்றார்களா? அல்லது இருட்டில் படகு மோதி இறந்துவிட்டனவா? அல்லது நாய்கள் அதை கடித்து கொன்றுவிட்டனவா? என்று தெரியவில்லை. அந்த 2 ஆமைகளையும் மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தால்தான், ஆமைகள் இறந்ததற்கான நிஜகாரணம் தெரியவரும்.
ஆனால், செத்து போன ஆமைகளை இன்னும் யாரும் வந்து அகற்றவில்லையாம்.. உயிரினங்கள் இறந்துவிட்டால், வனத்துறையினர் உடனடியாக வந்து இவைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், ஆமைகள் முட்டையிட்டிருந்தால் அதனை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடல் உயிரின ஆர்வலர்களும், அந்த பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications