விழுப்புரத்தில் போனில் பேசிய சென்னை அழகுக்கலை நிபுணர் பிரியா.. புதுச்சேரி நண்பர் பார்த்த கோலம்
விழுப்புரம்: இலங்கையை சேர்ந்த பிரியா என்பவர் சென்னையில் அழகுக்கலை நிபுணராக வேலை செய்து வந்தார். இவர் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, 13 வயது மகளுடன் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார் சாவடியில் வசித்து வந்தார். இவர் புதுச்சேரியை சேர்ந்த நண்பருடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவர் கூறிய தகவலை கேட்டு ஆடிப்போனார்.. என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தனிமை என்பது மோசமானது, கணவரை பிரிந்த பெண்கள், தனியாக குழந்தையை வளர்ப்பது என்பது சவாலானது. அப்படியான சூழலில் ஆதரவாக இருக்க வேண்டிய உறவுகள் பிரிந்து சென்றால், அவர்களுக்கு சரியான ஆறுதல் இல்லாமல் போனால் அல்லது ஆதரவு இல்லாமல் போனால் தவறான முடிவெடுக்கிறார்கள். இதுதவறு தான் என்றாலும் சிலர் முட்டாள்தனத்தை செய்கிறார்கள். எந்த நிலையிலும் இப்படிப்பட்ட ஒரு தவறை யாரும் செய்யவே கூடாது. விழுப்புரம் கோட்டக்குப்பத்தில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

இலங்கையை சேர்ந்த 35 வயதாகும் பிரியா என்பவர் சென்னையில் அழகுக்கலை நிபுணராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இவர் தனது கணவர் தயாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2011-ம் ஆண்டே விவாகரத்து பெற்றார். இதன் பின் 13 வயது மகளுடன் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார்சாவடியில் பிரியா தனியாக வசித்து வந்தார்.
சம்பவம் நடந்த அன்று அழகு கலை நிபுணர் பிரியாவின் மகள், தன்னுடன் படிக்கும் நண்பரின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த பிரியா, புதுச்சேரியை சேர்ந்த நண்பர் ஆரோக்கியராஜ் என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
அப்போது, தனக்கு வாழ பிடிக்கவில்லை, வாழ்க்கையை முடித்துக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியராஜ் பிரியா வீட்டுக்கு சென்று விரைந்து சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் இருந்த கோலத்தை கண்டு ஆண் நண்பர் ஆடிப்போனார். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு அழகு கலை நிபுணர் பிரியாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மேலும் அவரது வீட்டில் சோதனை செய்தபோது கடிதம் ஒன்று சிக்கியது. அதில், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை, இலங்கையில் உள்ள தனது உறவினர்களுக்கு தான் இறந்த தகவலை தெரிவிக்க வேண்டும்.
இலங்கையில் இருந்து உறவினர்கள் வரும் வரை தனது மகளை வீட்டு வேலை செய்யும் விஜயாவின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்' என்று பிரியா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரியாவின் இந்தமுடிவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications