கண்ணிமைப்பதற்குள் நடந்த விபத்து.. 2 மாணவர்களின் உயிரை பறித்த மினி பஸ்.. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஷாக்
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து பயில்கின்றனர். இப்படி இருக்கையில் இவர்கள் மாலையில் புதுப்பட்டி நோக்கி செல்லும் மினி பேருந்தில் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்படித்தான் இன்று மாலையும் சுமார் 30 மாணவர்கள் இந்த பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் பேருந்து கிருஷ்ணா பேட்டை அருகே வந்தபோது விபத்தில் சிக்கியுள்ளது.

பேருந்து வேகமாக வந்ததால் திருப்பத்தில் சரியாக திரும்பாமல் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்திருக்கிறது. இதில் சம்பவ இடத்திலேயே 12ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications