Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆபாச சேர்மன்".. "ரொம்ப பயமா இருக்கு சார்".. கலெக்டரிடம் தேம்பி தேம்பி அழுத மாணவிகள்.. என்னாச்சு?

அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளிடம் கலெக்டர் நேரில் விசாரணை நடத்தினார்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களிடம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி விசாரணை நடத்தினார்.. அப்போது, மாணவிகள் கண்ணீர் மல்க முக்கிய கோரிக்கை ஒன்றை கலெக்டரிடம் விடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் அரசு நர்சிங் கல்லூரி என்ற பெயரில் ஒரு தனியார் காலேஜ் செயல்பட்டு வருகிறது.

சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.. வெளியூர் மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகள் இங்கு அதிகளவில் படிக்கின்றனர்.. டிஎம்எல்டி, கேட்டரிங் பயிற்சி வகுப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன.

 பாஜக நிர்வாகி

பாஜக நிர்வாகி

இந்த கல்லூரியின் சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜக நிர்வாகி ஆவார்... முன்னாள் பாஜக சிறுபாண்மை பிரிவு மாவட்ட தலைவருமாகவும் இருந்துள்ளார். இவர், இங்கு படிக்கும் 2ம் ஆண்டு மாணவி ஒருவருக்கு, செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளதாக கூறப்பட்டது.. வீடியோ காலில் நிர்வாணமாக வந்து நின்றாராம்.. இதனால் அந்த மாணவி, இது குறித்து சக மாணவிகளிடம் சொல்லி அழுதுள்ளார்.. இதைக் கேட்டு அதிர்ந்து போன சக மாணவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி, நேற்று முன்தினம், தர்ணாவிலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

 ஆவேச முழக்கம்

ஆவேச முழக்கம்

சம்பந்தப்பட்ட சேர்மனை உடனே கைது செய்யுங்கள் என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.. அதன்படியே சேர்மனும் கைதானார்.. எனினும், சமாதானம் ஆகாத மாணவிகள் தங்களுடைய சர்ட்டிபிகேட்கள், பணம் எல்லாவற்றையும் உடனடியாக திரும்பி தர வேண்டும் என்று முழக்கமிட்டனர்.. மாணவிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு முக்கிய கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக விடுத்தனர்.

 நிர்வாணமாக வீடியோ

நிர்வாணமாக வீடியோ

அதில், "மாணவியை ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாணமாக அழைத்து வீடியோ காலில் பேச வைத்துள்ளார். அதேபோல் தவறாக நடந்து கொள்ள பலமுறை முயற்சித்துள்ளார். இதை நிரூபிக்க எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. தயவுசெய்து எங்களை காப்பாற்றுங்கள் சார்... தவறு நடந்த பிறகு காப்பதை விட தவறு நடப்பதற்கு முன்பே எங்களை காப்பாற்றுங்கள்,

 பயமா இருக்கு சார்

பயமா இருக்கு சார்

டாஸ்வினுக்கு கிடைக்கும் தண்டனை அந்தப் பெண்ணுக்கு கிடைத்த நீதி. எல்லோருக்கும் இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். கல்லூரி மூடிவிட்டால் எங்கள் படிப்பு வீணாகி விடும். உடன்படிக்கும் பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்தது எங்களுக்கு அச்சமாக உள்ளது. படிப்பை நிறுத்தாமல் வேறொரு கல்லூரியில் படிக்க அரசு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்..

டாஸ்வின்

டாஸ்வின்

இதனிடையே, கைதான டாஸ்வினை, அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி பாஜகவின் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் உத்தரவிட்டார்.. மேலும், டாஸ்வின், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 24-ந்தேதி வரை காவலில் வைக்கப்பட்டார்.. இதைத்தொடர்ந்து கல்லூரியும் மூடப்பட்டது. மேலும் கல்லூரி விடுதி செயல்படாததால் அங்கு தங்கியிருக்கும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, சம்பந்தபட்ட கல்லூரி மாணவிகளை இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்... அப்போது நடந்த சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தினார்.

 கண்ணீர்

கண்ணீர்

இந்த விசாரணையின் போது அக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்... அப்போது மாணவிகள் கலெக்டரிடம், "தாங்கள் படிப்பது தனியார் கல்லூரி என்பதால் எங்களது படிப்புக்கு பாதிப்பு ஏற்படலாம்.. இங்கு தவறு நடந்துள்ளதால் தொடர்ந்து படிக்க பயமாக உள்ளது. கல்லூரி மூடப்பட்டதால் எங்கள் படிப்பு பாதிக்கப்படக்கூடாது... கல்லூரி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்... மேலும் வேறு கல்லூரிகளில் இடம் இருந்தாலும் எங்களை சேர்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்..

 ஹாஸ்டல்

ஹாஸ்டல்

அதற்கு கலெக்டர் மேகநாத ரெட்டி, ஹாஸ்டலில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு வருவாய் துறை மூலம் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.. அவர்கள் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இப்போது, பள்ளி தாளாளர், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் மாணவிகளிடம் கலெக்டர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+