மூகமூடி கொள்ளை.. விருதுநகரில் மில் வாங்கி தொழில் அதிபர்களான பெண் வக்கீல்கள்.. குவிந்த பல கோடி சொத்து
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் நடந்த முகமூடி கொள்ளை சம்பவமும் , அதன்பிறகு கொள்ளையடித்த பெண்கள் தொழில் அதிபர்களாக மாறியது குறித்தும் சினிமா படமே எடுக்கலாம். வக்கீல்கள், ஆடிட்டர் உள்பட படித்தவர்கள் சினிமா பாணியில் செய்த சம்பவம் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கிரைம் திரில்லர் படங்களை விரும்பி பார்ப்போருக்கு திடீரென வரும் ட்விஸ்டுகள் தூக்கி அடிக்கும். இவர்களா இந்த குற்றத்தை செய்தார்கள் என்று விறுவிறுப்பை தரும். சினிமா பார்க்க தியேட்டரில் உட்காருபவர்களை நுனி சீட்டில் அமர வைக்கும். ரியலில் அதைவிட திரில்லான சம்பவங்கள் நடக்கின்றன.

அப்படி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். இதில் ஹைலைட் என்னவென்றால், கொள்ளையடித்த நகைகளை விற்று நூற்பாலை வாங்கியருக்கிறது இந்த கும்பல். இதுதொடர்பாக 2 பெண் வக்கீல்கள் உள்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உள்பட பல்வேறு இடங்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்தன. அப்படி சில மாதங்களுக்கு முன்பு ராஜபாளையத்தில் ஒரு வீட்டில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் அங்குள்ள சிசிடிவி கேமராவில் சிக்கினார். ஆனாலும், அந்த நபர் முகமூடி அணிந்து இருந்ததால் போலீசாரால் அவரை அடையாளம் காண முடியாத நிலை இருந்தது.
அதே நேரத்தில் விருதுநகர், மதுரை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடந்த முகமூடி கொள்ளை தொடர்பான வழக்குகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளில் அவரை போன்ற உருவம் பதிவாகி இருந்ததை போலீசார் கண்டார்கள். இதையடுத்து முக அமைப்பை கவனித்த போலீசார், முகமூடி கொள்ளையர்கள் தனி நெட்வொர்க்காக செயல்படுவது தெரியவந்ததை கண்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் விசாரணையில், இந்த கொள்ளைகளுக்கு மதுரையை சேர்ந்த மூர்த்தி என்பவர்தான் மூளையாக செயல்பட்டார் என்பதை அறிந்தனர். இந்நிலையில், ராஜபாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த தேனி மாவட்டம் தென்கரை பகுதியை சேர்ந்த ஆடிட்டர் அருண்குமார் (வயது 23), வக்கீல் சுரேஷ்குமார் (26) ஆகியோர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்கள்.
விசாரணையில், இருவரும் மூர்த்தியின் கூட்டாளிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜபாளையத்தில் தம்பதியை கட்டிப்போட்டு நடந்த கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்ததால் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசாரிடம் அவர்கள் சொன்னது தான் திருப்பத்தின் உச்சம் ஆகும். இந்த தொடர் கொள்ளையில் பெண்கள் முக்கிய பங்கு வகித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
சில பெண்கள் டிப்-டாப்பாக உடை அணிந்து தெருத்தெருவாக சென்று நோட்டமிடுவார்களாம். அதில் ஆட்கள் இல்லாத வீடு அல்லது, தனியாக ஒன்றிரண்டு பேர் வசிக்கும் வீடுகளை கண்டறிந்து அந்தபெண்கள் கூறுவார்களாம். அவர்கள் கொடுக்கும் தகவலின்பேரில், சுரேஷ்குமார், அருண்குமார் உள்ளிட்டோர் சேர்ந்து பல்வேறு இடங்களில் முகமூடி கொள்ளையை அரங்கேற்றி உள்ளார்களாம்.
இந்த விவகாரத்தில் மூர்த்தியின் உறவினர்களான ராஜபாளையம் அருகே ஆவாரந்தை கிராமத்தைச் சேர்ந்த சீனியம்மாள் (53), மோகன் (40), இவருடைய மனைவி லட்சுமி (38), உறவினர் மகாலட்சுமி (33). மற்றும் மதுரையைச் சேர்ந்த வக்கீல்கள் பிரியா (29), நாகஜோதி (26) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளையடித்த பணத்தை என்ன செய்தார்கள் என்று விசாரித்தபோது, தாங்கள் கொள்ளையடித்த பணம், நகைகளை விற்று கோடீஸ்வரர்களாக இந்த கும்பல் மாறி உள்ளது. அதன்மூலம் ராஜபாளையத்தில், மதுரை சாலையில் ரூ.4 கோடி மதிப்பிலான ஒரு நூற்பாலையை விலைக்கு வாங்கியது தெரியவந்துள்ளது. அதுதொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளார்கள். இந்த கொள்ளை கும்பலிடம் இதுவரை 150 பவுன் நகைகள், ரூ.2½ லட்சம் மற்றும் மடிக்கணினி, செல்போன்கள் என ரூ.84 லட்சம் மதிப்பிலான பொருட்கள், நகை, ரொக்கம் கைப்பற்றி உள்ளனர்.
கொள்ளையடித்த நகைகளை விற்று ராஜபாளையத்தில் வாங்கிய ரூ.4 கோடி மதிப்பிலான நூற்பாலை மட்டுமல்லாமல், மதுரையில் பல கோடியில் ஆடம்பர பங்களாவும், வேறு சில சொத்துக்களும் வாங்கி இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக மூர்த்தி உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications