Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டின் அழகிய நகரமான 'ராஜபாளையம்'.. என்ன ஒரு மாஸ்டர் பிளான்.. நெகிழ்ந்த வெளிநாட்டுக்காரர்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தமிழ்நாட்டின் அழகிய நகரமான ராஜபாளையமானது பூஜ்ஜிய கார்பன் சிட்டிக்கான மாஸ்டர் பிளானை உருவாக்கியுள்ளது. சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெறுவது, 20 இருக்கைகள் கொண்ட மின்சார பேருந்துகளை நிறுவுவது, நீர் மட்டத்தை மேம்படுத்துவது, பூங்காக்களை நிறுவுவது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலான எரிக் சாலியம் பாராட்டியுள்ளார்.

நார்வே நாட்டின் முன்னாள் அமைச்சரான எரிக் சாலியம் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இவர் 2016 முதல் 2018 வரைல் ஐ.நா சுற்றுச்சூழல் திட்டத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். நார்வே நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் 2007 முதல் 2012 வரை பதவி வகித்தவர் ஆவார். இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு நடக்கும் சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

virudhunagar rajapalayam

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திர மாநிலம் சென்ற எரிக் சாலியம், ஆந்திராவில் இயற்கை விவசாயம் இந்த உலகத்தையே உக்குவிக்கிறது என்று பாராட்டினார். உலகளாவிய விவசாயம் பசுமையாக மாற வேண்டும் என்றும் குறைந்த உரம் மற்றும் குறைந்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி, பெரிய மற்றும் ஆரோக்கியமான பயிர்களை வளர்த்து, விவசாயிகள் சிறந்த வருமானத்தை ஈட்ட வேண்டும் என்றும் எரிக் சாலியம் கூறினார். இதேபோன்று சீனா உள்பட பல்வேறு நாடுகளில் நடக்கும் அறிவியல் மாற்றங்களையும் , பிரம்மாண்ட வசதிகளையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் எரிக் சாலியம் தமிழ்நாட்டின் ராஜபாளையம் நகரை வெகுவாக பாராட்டி உள்ளார். மும்பை, டெல்லி உள்பட பல்வேறு பெரிய நகரங்கள் கூட இப்படி திட்டத்துடன் இல்லை என்று புகழ்ந்துள்ளார்.

எரிக் சாலியம் கூறுகையில், " இந்த இந்திய நகரம், கார்பன் இல்லாத, இயற்கையை விரும்பும் நகரமாக உள்ளது.. அந்த நகரத்தின் பெயர் ராஜபாளையம்.. நான் நின்று கொண்டிருக்கும் இடத்தின் பின்னால் தான் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் அழகிய நகரமான ராஜபாளையத்தில் 2 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.. இந்த நகரம் பூஜ்ஜிய கார்பன் நகரத்திற்கான மாஸ்டர் பிளானை உருவாக்கி இருக்கிறது.

ராஜபாளையம் மக்கள் மின் சக்தியை சோலார் மூலம் பெறுகிறார்கள்.. இதற்காக சோலார் மின்தகடு நகரம் முழுக்க அமைத்துள்ளார்கள்.. இதேபோல் குப்பைகளை சேகரித்து அகற்றுவதிலும் மாஸ்டர் பிளான் உருவாக்கி உள்ளார்கள்.. அதேபோல் 20 இருக்கைகள் கொண்ட மின்சார பேருந்துகளை நகரங்களில் இயக்குகிறார்கள்.. நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதிலும், நீர் மட்டத்தை மீட்டெடுக்கவும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

மரங்களை நடுகிறார்கள். பூங்காக்களை நிறுவுவது உள்ளிட்ட பல விஷயங்களை செய்கிறார்கள். இந்த முயற்சி ஒரு அற்புதமான பசுமையான நகரத்தை உருவாக்கும். இந்த முயற்சிளை பார்த்து வியந்து போகிறேன். ஏனெனில் டெல்லி, மும்பை உள்ளிட்ட இந்தியாவில் மக்கள் தொகை மிக அதிகமாக உள்ள பெரிய நகரங்களில் கூட இப்படி மாஸ்டர் பிளான் இல்லை.. ராஜபாளையம் நகரில் மேற்கொள்ளப்படும் கார்பன் இல்லாத நகரம் என்ற மாஸ்டர் பிளான் திட்டம். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள நகரங்களை நிச்சயம் ஊக்குவிக்கும்" என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+