விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனை கட்டி அணைத்த சரத்குமார்! கை குலுக்கிய ராதிகா.. விருதுநகரில் நெகிழ்ச்சி
விருதுநகர்: விருதுநகர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகாவும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பவுர்ணமி நன்னாள் மற்றும் பங்குனி உத்திரம் என்பதால் அதிமுக, திமுக, பாஜக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மக்களவைத் தேர்தலுக்காக வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தனர்.

அப்போது பல இடங்களில் நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தன. அதாவது தென் சென்னையில் பாஜக சார்பில் தமிழிசையும் திமுக சார்பில் தமிழச்சியும் வேட்புமனு தாக்கலுக்கு வந்த போது நேருக்கு நேர் மண்டல அலுவலகத்தில் சந்தித்துக் கொண்டனர்.
அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கட்டி அணைத்துக் கொண்டனர். தமிழச்சியின் தந்தை தங்கப்பாண்டியனும் தமிழிசையின் தந்தை குமரி அனந்தனும் எம்எல்ஏவாக இருந்தபோது ஒரே குடியிருப்பில் இருந்ததால் இவர்கள் இருவரும் சிறு வயது காலத்து தோழிகள்.
வளர்ந்து இருவரும் வேறு வேறு திசையை நோக்கி பயணிக்கிறார்கள். அது போல் வேறு அரசியல் கட்சியின் கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். இருந்தாலும் நட்பு நட்புதானே என்று இவர்கள் பழகி வருகிறார்கள். அது போல் நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கமும் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போது இருவரும் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
கே.பி. ராமலிங்கம் ஏற்கெனவே அதிமுகவில் இருந்தவர். பிறகு அங்கிருந்து திமுகவுக்கு சென்று தற்போது பாஜகவில் இருக்கிறார். எனவே தங்கமணியுடன் கே.பி.ராமலிங்கம் அன்பை பொழிந்தார். அது போல் விருதுநகரிலும் ஒரு சம்பவம் நடந்தது. விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் வேட்பாளர் விஜய பிரபாகரன் வந்திருந்தார்.
அப்போது வேட்புமனு தாக்கல் செய்ய ராதிகாவும் சரத்குமாரும் வருகை தந்தனர். விஜயகாந்த் மகனை பார்த்ததும் சரத்குமார், அவரை கட்டி அணைத்தார். பிறகு ராதிகாவும் விஜய பிரபாகரனுக்கு கைகுலுக்கினார். இதையடுத்து சரத்குமார், ராஜேந்திர பாலாஜியுடன் பேசினார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த ராதிகா, "விருதுநகர் எம்பியாக உள்ள மாணிக்கம் தாகூர் தொகுதிக்கே வருவதில்லை என்கிறார்கள். விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் என் மகளுடன் படித்தவர். அதனால் அவரும் எனக்கு மகன் மாதிரி, சின்ன பையன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என நேற்று காலை ராதிகா வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications