எடப்பாடி பழனிசாமிக்காக விருதுநகரில் கிளம்பிய நபர்? அதிமுகவில் உற்சாகம்.. பலே
விருதுநகர்: அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என்று அறிவித்தபோதிலும், அதிமுகவினர் இன்று மாவட்டங்களில், பொதுச்செயலாளரின் பிறந்தநாள் விழாவை சிறப்பித்து கொண்டிருக்கிறார்கள்.
வரப்போகும் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது.. அத்துடன் தன்னுடைய கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியிலும் இறங்கி வருகிறது.. மேலும், வரப்போகும் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ஒட்டுமொத்த அதிமுகவினரும் அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளனர்.

புரட்சித் தமிழர் எடப்பாடியார் பேரவை
அதிமுகவில் ஏற்கனவே அனைத்துலக எம்ஜிஆர் மன்றம், புரட்சித் தலைவி ஜெயலலிதா பேரவை ஆகியவை கட்சியின் அதிகாரப்பூர்வ துணை அமைப்புகளாக உள்ள நிலையில், "புரட்சித் தமிழர் எடப்பாடியார் பேரவை" என்ற அமைப்பு உதயமாக இருப்பதாகவும், மே 12ம் தேதி எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளில் இந்த பேரவை துவங்கப்பட்டு தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவிக்க போவதாகவும் சில தினங்களுக்கு முன்பு செய்திகள் கசிந்திருந்தன.
அதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 73வது பிறந்தநாளை, வெகுசிறப்பாக கொண்டாடவும் கட்சியினர் ஏற்கனவே முடிவு செய்துள்ளனர். மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள் என அனைவரும் கிராமம் முதல் நகரம் வரை எடப்பாடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளதாக கூறப்பட்டது.
மறைமுக பிரச்சாரம்
ஏனென்றால், வரவிருக்கும் தேர்தலுக்கு அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் மக்கள் மனதில் இன்னும் அழுத்தமாக பதிய வைக்கவேண்டும் என்பதற்கான மறைமுகமான பிரச்சாரமாக இது கருதப்படுகிறதாம்.
அந்தவகையில், தமிழகம் முழுவதுமே இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், எடப்பாடி பழனிசாமியின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவினர் ஆண்டாள் கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தனர். தங்கத் தேரில் ஸ்ரீஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி நீண்ட ஆயுளுடன் வாழவும், மீண்டும் தமிழக முதலமைச்சராக வரவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அதிமுக சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்னும் தமிழகத்தின் மாவட்டங்களில், எடப்பாடியின் பிறந்தநாள் விழாவை சிறப்பித்து வருகிறார்கள்.. ஆனால், எடப்பாடியை பொறுத்தவரை, இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் உருவாகியிருந்ததால், பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என்று அறிவித்திருந்தார் எடப்பாடி..
எல்லையில் போர்
கொண்டாட்டங்களுக்கு பதிலாக, ரத்த தானங்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலச் செயல்பாட்டு நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நமக்காக எல்லையில் போர் புரியும் நம் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், வெற்றி பெற்றிடவும், திருக்கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனாலும், எடப்பாடியை முதல்வராக்கியே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, அதிமுகவினர் பிறந்தநாள் விழாவை நடத்தி வருகிறார்கள்.. இதில் நபராக தங்கத் தேர் இழுத்து வேண்டிக் கொண்டது விருதுநகர் ராஜேந்திர பாலாஜிதான்..!!












Click it and Unblock the Notifications