இன்று தீர்ப்பு.. யார் இந்த பேராசிரியை நிர்மலா தேவி? தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கின் பின்னணி
விருதுநகர்: மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக பேராசிரியர் நிர்மலா தேவி மீது தொடரப்பட் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்த நிர்மலா தேவி என்பவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மாணவிகளிடம், போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன. சுமார் ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
யார் இந்த நிர்மலா தேவி: அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி. இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் செல்வாக்குடன் இருந்ததாக கூறப்படுகிறது. பேராசிரியை நிர்மலா தேவி,, தான் வேலை செய்த தனியார் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி, அவர்களை உயர்கல்வித்துறையின் செல்வாக்கானவர்களுக்கு பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றுள்ளார்..
பேராசிரியை நிர்மலா தேவியின் இலக்கில் இருந்த சில மாணவிகள், நிர்மலாதேவி பேசியதை ரெகார்ட் செய்து பெற்றோர்கள் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்தனர். அதை அப்போது கல்லூர் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று புகார் எழுந்த நிலையில், ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகள் எழுந்தது..
ஆரம்பத்தில் மறைக்கப்பட்ட இந்த பிரச்சனையை கையில் எடுத்து பல்வேறு அமைப்புகளின் போராட்டம் நடத்தியதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகே போலீஸ் விசாரணை நடந்தது.. 2018 ஏப்ரலில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஆளுநர் மாளிகையும் இந்த வழக்கில் இணைத்துப் பேசப்பட்டதால், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் தனியாக ஒரு விசாரணைக்குழுவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.
இதனால் தமிழக அரசியலில் பெரும் விவாதமாக மாறிய நிர்மலா தேவி வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுஅன்றைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் நிர்மலா தேவியுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள்.
இந்த வழக்கில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபசார தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் விசாரணை நடத்தி நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் குற்றவாளிகள் என இறுதிசெய்து குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. நீண்ட நாள்கள் சிறையில் இருந்த நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் தற்போது ஜாமினில் வெளியில் உள்ளனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், அனைத்துச் சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications