60 நாட்கள் கெடு ஓவர்.. ஈரான் போரில் அமெரிக்காவுக்கு சிக்கல்! சட்டென பேக் அடித்த டிரம்ப்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் போர் எப்போது முடியும்? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில், போர் தொடர்பான மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதாவது, அமெரிக்க சட்டப்படி, அதிபர் ஒரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால், அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற குறிப்பிட்ட காலக்கெடு உள்ளது. ஈரானுடனான மோதல் போக்கிற்கு இந்த காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

60-Day Deadline Ends

காலக்கெடு

அமெரிக்காவின் 'War Powers' சட்டத்தின்படி, 60 நாட்களுக்குள் நாடாளுமன்ற அனுமதி பெறாவிட்டால் ராணுவத்தினர் திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த 60 நாட்கள் கெடு முடிவடைய இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றமும் போருக்கான ஒப்புதலை கொடுக்கவில்லை. எனவே, இனி ஈரான் மீது அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தாக்குதல் நடத்த முடியாது. இது டிரம்புக்கு மிகப்பெரிய பின்னடைவு.

அதிகாரிகளின் விளக்கம்

இப்படி இருக்கையில் இந்த பிரச்சனையை சமாளிக்க, அமெரிக்க அதிகாரிகள் புதிய வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, ஈரான் மீது தற்போது பெரிய அளவிலான நேரடித் தாக்குதல்கள் இல்லாததால், அந்த சட்ட ரீதியான காலக்கெடு பொருந்தாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இப்போது போர் போன்ற சூழல் இல்லை என்பதால், ராணுவத்தை விலக்க வேண்டிய கட்டாயம் தற்போதைக்கு எழவில்லை என அவர்கள் வாதிடுகின்றனர்.

எஸ்கேப் ஆன டிரம்ப் அரசு

இருந்தாலும், அமெரிக்கா தனது படைகள் மற்றும் பிராந்திய நலன்களைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும் என்றும், ஆனால் அவை ஈரானுடன் ஒரு முழுமையான போரை நோக்கியது அல்ல என்றும் அந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிம்பிளாக சொல்வதெனில், ஈரானுடனான நேரடி ராணுவ மோதல்கள் தற்போது குறைந்துள்ளதால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் போர் அதிகார சட்டத்தின் கீழான கடுமையான கட்டுப்பாடுகளில் இருந்து தப்பிப்பதற்கும், அதே சமயம் பிராந்தியத்தில் ராணுவ இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் அமெரிக்க அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

மீண்டும் போர் நடந்தால் என்ன ஆகும்?

விளக்கம் என்னவோ ஓகேதான். ஆனால், இனி ஈரான் மீது குண்டு வீசாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அப்படி மீண்டும் குண்டு வீசப்பட்டால்.. அமெரிக்க மக்களே அதை எதிர்த்து தைரியமாக குரல் கொடுப்பார்கள். நாடாளுமன்றத்தில் விவாதங்கள் வெடிக்கும். ஏனெனில் போரை அறிவிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டும்தான் இருக்கிறது. அவசர காலங்களில் மட்டும் அதிபர் அறிவிக்கலாம்.

இப்போது மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், நாடாளுமன்றத்தில் டிரம்ப் சரமாரியான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மட்டுமல்லாது போருக்கான நிதியை நாடாளுமன்றம்தான் ஒதுக்க வேண்டும். டிரம்ப் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக பதில் சொல்லவில்லை எனில், நிதி போதுமான அளவில் ஒதுக்கப்படாது. மட்டுமல்லாது, டிரம்ப் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+