இதையெல்லாம் கூடவா விற்பாங்க.. வாரத்திற்கு ரூ 37 லட்சம் காசு பார்த்த நடிகை.. குவியும் ஆர்டர்கள்!
வாஷிங்டன்: டிக்டாக் பிரபலம் மற்றும் டிவி நடிகை ஸ்டீபன் மாட்டோ தனது ஆசனவாயிலிருந்து பிரியும் காற்றை ஒரு ஜாடியில் அடைத்து வைத்து அதை விற்பனை செய்து ஒரே வாரத்தில் 37 லட்சம் ரூபாய் சம்பாதித்த விவகாரம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நடிகர், நடிகை என்றாலே ஒரு சிலர் வானுயரத்தில் வைத்து பார்ப்பர். சிலர் அவர்களும் நம்மை போன்றவர்களே என நினைத்து அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் எப்படியாவது முட்டி மோதிக் கொண்டு அவர்களுடன் செல்பி எடுக்கும் அளவுக்கு போய்விடுவர்.
இது சராசரியாக நடப்பதாகும். ஆனால் இன்னும் சில ரசிகர்கள், தனது அபிமான நடிகர், நடிகைகள் பயன்படுத்தும் எந்த ஒரு பொருளையும் அவர்களது ஞாபகர்த்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என கருதுவர்.

காகிதங்கள்
அதன்படி அவர்கள் செல்லும் ஷூட்டிங் ஸ்பாட்களில் அவர் சாப்பிட்டுவிட்டு போடும் காகிதங்களை கூட சேகரிக்கத் தொடங்குவர். அதிலும் நடிகைகள் என்றால் கேட்கவே வேண்டாம். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் அந்த காலத்தில் பல லட்சங்களுக்கு ஏலம் சென்றதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம்.

நடிகைகளின் உடை
நடிகைகளின் உடைகளும் பல லட்சங்களுக்கு ஏலத்திற்கு செல்லும். இதை வைத்து ஒரு சிலர் பணம் பார்ப்பர். இன்னும் சிலர் அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் நல்ல காரியங்களை செய்வர். ஆனால் டிவி நடிகர் ஒருவர் எதையெல்லாம் விற்று பணம் சம்பாதிக்கிறார் என்பதை பார்க்கவே நாராசமாக இருக்கிறது.

90 டே பியான்ஸ் டிவி ஷோ
90 டே பியான்ஸ் என்ற டிவி ஷோ மூலம் பிரபலமானவர் ஸ்டீபன் மாட்டோ. இவர் ஆசனவாயிலிருந்து பிரியும் காற்றை ஒரு ஜாடியில் பிடித்து விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஒரே வாரத்தில் அவர் 37 லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக கூறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாவில் வீடியோ
இதுகுறித்து வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். எப்படி அந்த காற்றை பாட்டிலில் பிடிப்பது என்பது குறித்தும் அவர் விவரித்துள்ளார். மேலும் அந்த காற்று எத்தனை மணி நேரத்திற்கு நீடித்திருக்கும் என்பதையும் அவர் விளக்கியுள்ளார். மேலும் தான் காலை சிற்றுண்டியாக புரத மஃபின், வேக வைத்த முட்டைகள், புரத ஜூஸ், யோகர்ட் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நல்ல வாசனையுடன் இருக்க அந்த ஜாரில் மலர்களின் இதழ்களையும் போட்டு வைக்கிறார். நீண்ட நாட்களாக எதையெல்லாம் சந்தைப்படுத்தலாம் என யோசித்து கொண்டிருந்த நிலையில் ஆசன வாய் காற்றை விற்பனை செய்தால் அமோகமாக இருக்கும் என எண்ணியே இதை தொடங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications