உலகை நடுங்க வைக்கும் கொரோனா மரணங்கள்.. அமெரிக்கா, மெக்ஸிகோ, இங்கிலாந்து, பிரேசிலில் விபரீதம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா, மெக்ஸிகோ, இங்கிலாந்து, பிரேசில் போன்ற நாடுகளில் உயிரிழப்பு மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களி எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது., குறிப்பாக அமெரிக்காவில் ஒரே நாளில் 166,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் தினசரி இப்படித்தான் தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 21லட்சத்து 28ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 427,587 பேர் பலியாகி உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 216,475 பேரும், இந்தியாவில் 153,376 பேரும், மெக்ஸிகோவில் 147,614 பேரும், இங்கிலாந்தில் 97,329 பேரும், இத்தாலியில் 85,162 பேரும் இதுவரை கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 9 கோடியே 92லட்சத்து 91 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 21லட்சத்து 28ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 7 கோடியே 13லட்சத்து 46 ஆயிரம் பேர் மீண்டனர். தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 2 கோடியே 58லட்சத்து 15 ஆயிரம் பேர் சிசிச்சை பெற்று வருகிறார்கள்.

அமெரிக்கா

அமெரிக்கா

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 2கோடியே 55லட்சத்து 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரு கோடியே 6லட்சத்து 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 88,16,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவில் 36,98,273 பேரும், இங்கிலாந்தில் 36,17,459 பேரும், பிரான்சில் 30,35,181 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டாப் 6 நாடுகள்

டாப் 6 நாடுகள்

உலகிலேயே அதிகபட்சமாக நேற்று அமெரிக்காவில் 166,717 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 61121 பேரும், இங்கிலாந்தில் 33,552 பேரும், பிரான்சில் 23,924 பேரும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். மெக்ஸிகோவில் 21,007 பேரும், ரஷ்யாவில் 20,921 பேரும் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார்கள்.

3,379 பேர் மரணம்

3,379 பேர் மரணம்

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 3,379 பேர் மரணம் அடைந்தனர். மெக்ஸிகோவில் 1440 பேரும், இங்கிலாந்தில் 1348 பேரும் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தனர். பிரேசிலில் 1176 பேரும், ரஷ்யாவில் 559 பேரும், ஜெர்மனியில் 516 பேரும் ஒரே நாளில் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+