இந்திய தூதராக நண்பரை நியமித்த டிரம்ப்.. மோடி - ஜி ஜின்பிங்கிற்கு சிக்கல்? யார் இந்த கோர்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மீண்டும் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளார். இது அமெரிக்காவுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படும் நிலையில் டிரம்ப் நம் நாட்டுக்கான தூதரை திடீரென்று மாற்றி உள்ளார். அதுமட்டுமின்றி புதிய தூதராக செர்ஜியோ கோர் என்பவரை நியமித்துள்ளார். இவர் டிரம்பின் நம்பிக்கை பெற்ற நண்பராக இருக்கும் நிலையில் அவரது பின்னணி பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வருகிறார். பதவியேற்ற காலத்தில் நம் நாட்டுடன் இணக்கமாக செயல்பட்டார். ஆனால் இப்போது அவர் தனது நடத்தையை மாற்றி உள்ளார். ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 50 சதவீத வரிகளை நம் நாட்டுக்கு விதித்துள்ளார்.

donald-trump-appointed-sergio-gor-as-ambassador-to-india-and-special-envoy-for-south-and-central-asi

முதற்கட்டமாக கடந்த 7 ம்தேதி 25 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில் வரும் 27 ம்தேதி அடுத்தகட்டமாக 25 சதவீத வரி அமலுக்கு வர உள்ளது. இது நம் நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதிகப்படியான வரியால் அமெரிக்காவுக்கு செல்லும் இந்திய பொருட்களின் ஏற்றுமதி சரியும் நிலை உருவாகி உள்ளது.

சீனாவுடன் கைகோர்த்த இந்தியா

இதனால் சீனாவும், நம் நாடும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. 2020 கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை பிரச்சனையில் இருநாட்டின் வீரர்களும் மோதிய நிலையில் உறவு பாதிக்கப்பட்டது. தற்போது 5 ஆண்டுகளுக்கு பின் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையில் இந்தியா - சீனா உறவு புத்துயிர் பெற தொடங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

தூதரை நியமித்த டிரம்ப்

இந்நிலையில் திடீரென்று டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு புதிய தூதரை நியமித்துள்ளார். அவரது பெயர் செர்ஜியோ கோர். தற்போது நம் நாட்டுக்கு அமெரிக்கா தூதராக யாரும் இல்லை. கடந்த 2023 மே மாதம் 11ம் தேதி முதல் எரிக் கார்செட்டி நம் நாட்டுக்கான அமெரிக்கதூதராக இருந்தார். இவர் 2025 ஜனவரி 20ம் தேதி (டிரம்ப் பதவியேற்ற நாள்) வரை தூதராக செயல்பட்டார்.

அதன்பிறகு புதிய தூதர் நியமிக்கப்படாத நிலையில் டிரம்ப், தனது நண்பரான செர்ஜியோ கோரை நியமித்துள்ளார். இந்தியாவுக்கான தூதராக செர்ஜியோ கோர் நியமிக்கப்பட்டாலும் கூட செனட் சபையில் அது உறுதி செய்யபப்ட வேண்டும். இதனால் செனட் உறுதி செய்யும் வரை அவர் வெள்ளை மாளிகையின் இயக்குநராக இருப்பார். அதன்பிறகு இந்தியாவின் தூதராக பொறுப்பேற்பார்.

யார் இந்த செர்ஜியோ கோர்?

புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர், டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பர். அதோடு டிரம்பின் நம்பிக்கையை பெற்றவர்களில் ஒருவர். செர்ஜியோ கோர் தற்போது வெள்ளை மாளிகையின் தனி இயக்குநராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அவரை நம் நாட்டுக்கான தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு தூதராகவும் டிரம்ப் நியமனம் செய்துள்ளார்

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் டிரம்ப் அதிபரானதும் செர்ஜியோ கோர் அதிக முக்கியத்துவம் பெற்றார். டிரம்ப் மட்டுமின்றி அவரது குடும்பத்துக்கே நெருக்கமானவர் என்பதால் டிரம்பின் வலதுகரம் என்று அழைக்கப்பட்டார். டிரம்ப் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருடன் இணைந்து வின்னிங் டீம் பப்ளிஷிங்கை தொடங்கினர்.

இது அதிபர் டொனால்ட் டிரம்பின் 2 புத்தகங்களை வெளியிட்டது. டிரம்ப் பதவியேற்றது முதல் அரசு துறைகளில் பணியாற்றும் நபர்களின் தேர்வுகளை சரிபார்த்தார். நாசாவின் தலைவராக ஜாரெட் ஐசக்மேனை நியமிக்க டிரம்ப் முடிவு செய்தார். அதன்பிறகு அவர கைவிட்டார். இதில் ஜாரெட் ஐசக்மேனின் தேர்வுக்கு காரணமாக இருந்தவர் இந்த செர்ஜியோ கோர்.

நண்பர் என புகழ்ந்த டிரம்ப்

இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில், ‛‛ இந்தியாவுக்கான தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு தூதராகவும் செர்ஜியோ கோரை நியமித்ததை மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறோன். அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை என்ற வகையில் செர்ஜியோவும் அவரது குழுவினரும் நம் மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் கிட்டத்தட்ட 4,000 அமெரிக்க தேசபக்தர்களை பணியமர்த்தி உள்ளனர். எங்களின் துறைகள் மற்றும் நிறுவனங்கள் 95 சதவீதத்துக்கும் அதிகமாக நிரப்பப்பட்டுள்ளது

செர்ஜியோ ஒரு சிறந்த நண்பர், அவர் பல ஆண்டுகளாக என்னுடன் இருக்கிறார். அவர் எனது வரலாற்று சிறப்புமிக்க அதிபர் தேர்தல் பிரசாரங்களில் பணியாற்றினார். என்னை குறித்த புத்தகங்களில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களை வெளியிட்டவர் இவர். அதேபோல் எங்களை ஆதரித்து மிகப்பெரிய சூப்பர் PACs நடத்தினார்'' என்று கூறியுள்ளார்.

செர்ஜியோ கோர் போட்ட பதிவு

இதற்கு செர்ஜியோ கோர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛‛டிரம்ப் நிர்வாகத்தின் மகத்தான பணியின் மூலம் அமெரிக்க மக்களுக்கு சேவை செய்வதை விட வேறு எதுவும் எனக்கு பெருமை சேர்க்கவில்லை. அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். என் மீதான நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டுக்கு டிரம்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என் வாழ்க்கையில் இது ஒரு புதிய மைல்கல்'' என தெரிவித்துள்ளார்.

செர்ஜியோ கோர் இந்தியாவுக்கான தூதர் மட்டுமின்றி தெற்கு - மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்தியா, சீனாவின் நடவடிக்கைகளை அவரால் உன்னிப்பாக கவனிக்க முடியும். இதன்மூலம் இந்தியா - சீனாவின் திட்டங்களை முன்கூட்டியே அறிந்து டிரம்புக்கு தகவல் தெரிவிக்கும் பணியை செர்ஜியோ கோர் மேற்கொள்வார். இதனால் இந்தியாவும், சீனாவும் சுதாரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+