டிரம்ப் செயலால் இந்தியர்களுக்கு சிக்கல்.. மொத்தமாக நாடு கடத்தப்படும் அபாயம்! என்ன இப்படி பண்ணிட்டாரு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் தனது அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்து வரும் நிலையில், அவரது சமீபத்திய நியமனங்கள் அவர் இந்த முறை குடியேற்றத்தைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதையே காட்டுகிறது. இதனால் அங்குள்ள இந்தியர்களுக்குப் பல சிக்கல்கள் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் அடுத்தாண்டு தொடக்கத்தில் அதிபராகப் பதவியேற்க இருக்கிறார். இதற்காக அவர் தனது கேபினட் உறுப்பினர்களைத் தேர்வு செய்து வருகிறார்.

usa india us

இந்த முறை டிரம்பின் நியமனங்களை வைத்துப் பார்க்கும் போது அவர் குடியேற்ற விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக 2017- 2018 வரை டிரம்ப் இதற்கு முன்பு அதிபராக இருந்த போது முன்னாள் குடிவரவு மற்றும் சுங்க பிரிவின் தலைவராக இருந்த டாம் ஹோமனுக்கு இப்போது மீண்டும் எல்லையைக் கவனிக்கும் பொறுப்பை டிரம்ப் கொடுத்துள்ளார்.

யார் இவர்: ஹோமன் முன்பு குடிவரவு பிரிவு தலைவராக இருந்த போதே அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியவர். இந்த முறை புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளதால் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். அமெரிக்கா இதுவரை கண்டிராத மிகப்பெரிய நாடு கடத்தல் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக எல்லாம் ஹோமன் கூறி வருவது கவனத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

நாடு கடத்தப்படும் அபாயம்: இது அங்குள்ள இந்தியர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம். ஏனென்றால் சமீப ஆண்டுகளாகச் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாகக் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் அதிகம் செல்கிறார்கள். இதற்காகவே அங்குப் பல ஏஜெண்டுகளும் உள்ளனர். சுமார் 50 லட்ச ரூபாய் கொடுத்து, மெக்சிகோ மற்றும் கனடா வழியாகச் சட்டவிரோதமாக இவர்கள் அமெரிக்கா செல்கிறார்கள். இதுபோல சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் அங்கிருந்து பெரியளவில் நாடு கடத்தப்படலாம்.

மற்றொரு சர்ச்சை நியமனம்: அதேபோல ஸ்டீபன் மில்லர் என்பவரை வெள்ளை மாளிகை துணைத் தலைவர் (பாலிசி) டிரம்ப் நியமித்துள்ளார். அவரது நியமனம் அங்கு சட்டப்பூர்வமாகத் தங்கி இருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரையும் பாதிக்கலாம்.

டிரம்பின் முந்தைய அரசிலேயே குடியேற்றத்திற்கு எதிராகப் பல திட்டங்களைக் கொண்டு வந்தவர் இந்த மில்லர். இவர் சட்டவிரோத குடியேற்றத்தை மட்டுமின்றி, சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் எதிர்க்கும் நபர் இவரது அறிவுறுத்தல்படியே டிரம்ப் காலத்தில் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச் 1பி விசா மிக அதிகளவில் நிராகரிக்கப்பட்டன.. மேலும், H-1B விசா வைத்திருப்போரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் H4 EAD புதுப்பிக்கும் பணிகளும் தாமதமானது.

சிக்கல் ஏன்: மேலும், ஹெச் 1பி விசா யாருக்குத் தரலாம் என்பது குறித்துக் கடந்த 2020ல் மில்லிர் ஒரு பாலிசி மெமோவை வெளியிட்டார். அதன்படி பார்த்தால் அங்குள்ள இந்தியர்களில் சுமார் 60% பேர் ஹெச்1 விசாக்களில் வேலை செய்யத் தகுதியற்றவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் நபருக்கு மீண்டும் பவர் வந்துள்ளது அங்குள்ள இந்தியர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நியமனங்களை வைத்துப் பார்க்கும் போது டிரம்ப் ஆட்சி என்பது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்குச் சவாலான காலமாக அமையும் எனத் தெரிகிறது. சட்டவிரோதமாகக் குடியேறுவோர் மட்டுமின்றி, சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்கள், உரிய ஒர்க் விசா வைத்திருப்போரும் இதனால் சிக்கலை எதிர்கொள்ளலாம் என்று அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+