மனைவியை உயிருடன் புதைத்த கொடூரன்.. இடத்தை காட்டிக் கொடுத்த ஆப்பிள் வாட்ச்! கடைசியில் நடந்தது என்ன
வாஷிங்டன்: அமெரிக்காவில் பெண் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில், அவரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
சமீபத்தில் வெளியான புதிய ஆப்பிள் வாட்ச் மாடலில் எதாவது பிரச்சினை என்றால் நேரடியாக அவசர உதவி எண்ணை அழைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இது பலரது உயிர்களையும் காப்பாற்றி வருகிறது. விபத்துகள் ஏற்படும் போது ஆப்பிள் வாட்ச் தானாக அவசர உதவிக்குக் கால் செய்வதால் விலை மதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளன.

ஆப்பிள் வாட்ச்
இதனிடையே அமெரிக்காவில் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. பெண் ஒருவரைக் கணவரே கத்தியால் குத்தி, உயிருடன் புதைத்த நிலையில், ஆப்பிள் வாட்ச் உதவியுடன் அந்த பெண் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. கணவரை அந்த பெண்ணை உயிருடன் புதைத்த நிலையில், அவரே தோண்டி வெளியே வந்துள்ளார். அதன் பின்னரே அவசர எண்ணிற்கு கால் சென்றுள்ளது.

அமெரிக்கா
அமெரிக்காவைச் சேர்ந்த 42 வயது பெண் யங் சூக் ஆன். இவரது கணவர் 53 வயதான சே கியோங் ஆவார். இருவருக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இருப்பினும், அவர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததால் அவர்கள் விவாகரத்து பெற்றனர். இருந்த போதிலும், அவ்வப்போது சே கியோங் தனது முன்னாள் மனைவி வீட்டிற்குச் செல்வார் என்று கூறப்படுகிறது.

ஆவேசம்
அப்படித்தான் கடந்த வாரம் இவர் தனது முன்னாள் மனைவி வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.. இந்த வாக்குவாதம் சண்டையில் முடிந்த நிலையில், "எனது ஓய்வூதியத்தைக் கொடுப்பதை விட உன்னைக் கொன்றுவிடுவேன்" என்று சே கியோங் தனது மனைவியிடம் ஆவேசமாகக் கத்தியுள்ளார்.

கடத்தல்
பேட் ரூமில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆவேசமடைந்த கியோங் தனது முன்னாள் மனைவியைத் தாக்கியுள்ளார். இதில் அவர் மயக்கமடைந்தார். மேலும், அங்கிருந்த கத்தியை எடுத்தும் குத்தியுள்ளார். பின் டேப்பால் வாயையும் கைகளையும் ஓட்டிய அவர், காரில் அவரை சியாட்டில் புறநகர்ப் பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார்.

உயிருடன் புதைப்பு
தனது முன்னாள் மனைவியைக் கொல்ல திட்டமிட்ட அவர், அவரை உயிருடன் கொல்ல குழியைத் தோண்டி உள்ளார்.
அவரை பார்த்து "உன்னை உயிருடன் புதைக்கப் போகிறேன்... நீ சாவது உறுதி" என்று தெரிவித்து உள்ளார். யங் சூக் ஆன் ஏதோ ஆபத்தில் இருப்பதை ஆப்பிள் வாட்ச் கண்டறிந்துவிட்டது. இதையடுத்து அவசர எண்ணுக்கு அது கால் செய்து உள்ளது. மேலும், அவரது மகளுக்கும் எமர்ஜென்சி நோட்டிபிக்கேஷன் அனுப்பி உள்ளது.

தெளிந்த மயக்கம்
இதை பார்த்தும் ஆத்திரமடைந்த சே கியோங் ஆப்பிள் வாட்சையும் சுத்தியலால் அடித்து நொறுக்கியுள்ளார். பின் தனது முன்னாள் மனைவியை அந்தக் குழிக்குள் போட்ட சே கியோங், மண்ணை போட்டு அந்த குழியை மூட ஆரம்பித்து உள்ளார். அப்போது நல்வாய்ப்பாக யங் சூக் ஆனுக்கு மயக்கம் தெளிந்து உள்ளது. அந்த குழி மிகவும் ஆழமானதாக இல்லை. மெல்ல டேப்பை அகற்றிய அந்த பெண், கீழே இருந்து மண்ணை மெல்ல அகற்றி வெளியே வந்துவிட்டார்.

எஸ்கேப்
எங்கு தனது முன்னாள் கணவர் மீண்டும் வந்து தாக்குவாரோ என்று அஞ்சிய அந்த பெண் ஓடி சென்று பாதுகாப்பான மறைவிடத்தில் ஒளிந்து கொண்டார். ஆப்பிள் வாட்ச் கடைசியாக அனுப்பிய நோட்டிபிக்கேஷன் இடத்தை வைத்து யங் சூக் ஆனை பத்திரமாக மீட்ட போலீசார், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications