ஐநாவிற்கே விபூதி அடிக்க பார்த்த நித்தியானந்தா.. "கைலாசா"விற்கு பேச அனுமதி கிடைத்தது இப்படித்தானாம்?
ஐநா கூட்டத்தில் தலைப்பிற்கு பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நித்தியானந்தா பிரதிநிதிகளால் முன் வைக்கப்பட்டதனால், நித்தியானந்தா தரப்பினரின் கருத்துக்கள் ஐக்கிய நாடுகள் அவையால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது.
வாஷிங்டன்: கடந்த மாதம் 22ஆம் தேதி நடந்த ஐநா கூட்டத்தில், மா.விஜயப்ரியா நித்தியானந்தா என்ற பெண், 19-வது ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் கூட்டத்தில் கைலாசா நாட்டின் சார்பில் கலந்து கொண்டதாக ஒரு வீடியோ வெளியாகியிருந்தது. ஐநா கூட்டத்தில் கலந்து கொள்ள எப்படி அனுமதி கிடைத்தது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் ஆழமாக விவாதித்ததை காண முடிந்தது. இந்த நிலையில், ஐநாவில் எந்த அடிப்படையில் பேச அனுமதி கிடைத்தது என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இது தொடர்பாக அவர் மீதும் பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
கர்நாடக நீதிமன்றம் கடந்த 2010-ல் நித்தியானந்தாவிற்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தது.

தலைமறைவான நித்தியானந்தா
அவரது முன்னாள் ஓட்டுநர் லெனின் அளித்த புகாரின் அடிப்படையில், நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த நித்தியானந்தா, நாட்டை விட்டு வெளியேறி தலைமைமறைவானார். நித்தியானாந்தாவிற்கு எதிராக குஜராத் நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இப்படி இந்தியாவின் பல மாநிலஙக்ளில் வழக்குகள் இருக்கும் நிலையில், நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவான நித்தியானந்தா தற்போது எங்கு இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.

கைலசா என்ற தனிநாடு
சமூக வலைத்தளத்தில் மட்டும் வீடியோவில் தோன்றி பேசி வந்த நித்யானந்தா, திடீரென கைலசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு நிற்காமல் கைலாசா நாட்டிற்குத் தனிக்கொடி, நாணயம், வெளியுறவுத்துறை என அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அவ்வப்போது யூடியூப் பக்கத்தில் தோன்றி பேசும் நித்யானந்தாவிற்கு உடல் நிலை பாதிக்கப்படதாக தகவல் பரவின. பிறகு அதற்கும் நித்தியானந்தாவே வீடியோவில் தோன்றி விளக்கம் அளித்தார்.

ஐநா சபைக்கு கைலாசா பிரதிநிதிகள்
இப்படி அவ்வப்போது பரபரப்பை கிளப்பிக் கொண்டு இருக்கும் நித்தியானந்தாவின் அடுத்த அதிரடியாக ஐநா சபைக்கு தனது கைலாசாவின் பிரதிநிதிகளை அனுப்பியதாக கூறினார். இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி இருந்தன. அதில், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா என்று சொல்லி அதன் பிரதிநிதியாகப் பெண் ஒருவர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இருந்தார்.

தனியாக ஒரு நாட்டை உருவாக்கியதாக
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி நடந்த ஐநா கூட்டத்தில், மா.விஜயப்ரியா நித்தியானந்தா என்ற பெண், 19-வது ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் கூட்டத்தில் கைலாசா நாட்டின் சார்பில் கலந்து கொண்டார். நிலையான வளர்ச்சி குறித்து நடந்த மாநாட்டில் பேசிய அவர், இந்து மதத்தில் நிலையான வளர்ச்சி குறித்துப் பேசப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்துக்களுக்குத் தனியாக ஒரு நாட்டை நித்தியானந்தா உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெண்களுக்கு சம உரிமை
தொடர்ந்து கைலாசா நாட்டின் பெருமைகள பேசிய அவர், நித்தியானந்தா தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் பேசியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள்
நித்தியானந்தாவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தன. ஐநாவில் 'முடிவெடுக்கும் விஷயங்களில் பெண்களுக்கு சம உரிமை'என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றதாகவும் அதில் கைலசா பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.

முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது
ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை அமைப்பானது தங்கள் கூட்டத்தில் எந்த ஒரு அமைப்பை சேர்ந்தவர்களையும் பேச அனுமதி கொடுக்கிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய நித்தி கும்பல் கைலாசாவை ஐநா அங்கீகரித்தது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கைலாசாவை சேர்ந்த பிரதிநிதிகள் கடந்த மாதம் ஐநா கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தலைப்பிற்கு பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நித்தியானந்தா பிரதிநிதிகளால் முன் வைக்கப்பட்டது. எனவே நித்தியானந்தா தரப்பினரின் கருத்துக்கள் ஐக்கிய நாடுகள் அவையால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications