Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலறவிடும் டிரம்ப்.. அதிபரான ஓராண்டில் எத்தனை நாடுகள் மீது குண்டுவீசியுள்ளார் தெரியுமா? ஷாக் லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வெனிசுலாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகள் அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோரை சிறை பிடித்து சென்றுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கையை அமெரிக்க சிறப்பு படையினர் செய்துள்ளது. இந்நிலையில் தான் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் நேற்று வரை 7 நாடுகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். எந்தெந்த நாடுகள் மீது குண்டுவீசி உள்ளார் என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா - வெனிசுலா அண்டை நாடுகளாகும். இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்து இருந்தது. அதிகரித்தது. வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக மக்களை வெனிசுலா அனுப்பி வைப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதுதான் இருநாடுகள் இடையேயான பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.

how-many-countries-have-been-attacked-by-donald-trump-since-january-2025-full-list-here

இந்நிலையில் அமெரிக்க சிறப்பு படையினர் அமெரிக்கா. வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை நேற்று கைது செய்தனர். தற்போது இருவரும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் உள்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.

டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஆதரவு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. டிரம்ப் துணிச்சலானவர், தைரியமானவர் என்று புகழ்ந்துள்ளன. சீனா, ரஷ்யா, ஈரான், கியூபா உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்காவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபராக பதவியேற்று இன்னும் ஓராண்டுகள் நிறைவு பெறாத நிலையில் டொனால்ட் டிரம்ப் பல நாடுகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் இப்போது இணைந்துள்ள நாடு தான் வெனிசுலான.

நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா - உக்ரைன் போர் வந்திருக்காது. இஸ்ரேல் - காசா போர் வந்திருக்காது. இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான். மேலும் தொடர்ந்து பல நாடுகளின் போரை நிறுத்தி உள்ளேன். இதனால் அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு தான் தர வேண்டும் என்று தன்னை அமைதியின் தூதராக தானே அறிவித்து கொண்டார். இப்படி டிரம்ப் கூறி வந்த நிலையில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

கடந்த 2025 ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். இன்னும் ஓராண்டு நிறையவடையவில்லை. இந்நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை டொனால்ட் டிரம்ப் குண்டு வீசி தாக்குதல் நடத்திய நாடுகளின் விவரம் வெளியாகி உள்ளது.

ஈரான்

கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஈரான்-இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில், அமெரிக்கா ஈரான் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் வகையில் இந்த தாக்குதலை நடத்தினார். ஏற்கனவே அமெரிக்கா - ஈரான் இடையே இருந்த பகை இந்த சம்பவத்தால் இன்னும் அதிகரித்து தற்போதும் இருநாடுகள் இடையே பதற்றமான சூழலே தொடர்ந்து வருகிறது.

சிரியா

பால்மைரா துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 வீரர்கள் காயமடைந்தனர். இதனால் கோபமான டொனால்ட்டிரம்ப் சிரியாவில் உள்ள 70 ஐஎஸ்ஐஎல் (ISIL) தளங்கள் மீது தாக்குதல் நடத்தினார்.

சோமாலியா

சோமாலியாவில் அமெரிக்க படைகள், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் மற்றும் ஐஎஸ்ஐஎஸ்-சோமாலியா போன்ற ஆயுதக் குழுக்களுக்கு எதிராக போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

நைஜீரியா

நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை நடக்கிறது. இதனை நைஜீரியா அரசு தடுக்கவில்லை. கிறிஸ்தவ இனப்படுகொலை நைஜீரியாவில் நிகழ்த்தப்படுகிறது எனக்கூறி 2025 டிசம்பர் மாதம் 25ம் தேதி வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாகாணத்தில் உள்ள ஐஎஸ்ஐஎல் (ISIL) குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அங்கு கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்கள் சமமாகப் பிரிந்திருக்கும் ஒரு நாட்டில் "கிறிஸ்தவ இனப்படுகொலையை" அனுமதிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

ஏமன்

காசா மீதான இஸ்ரேலின் போரை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்காவுக்கு எதிராக ஏமனின் ஹவுதிகள் களமிறங்கின. இவர்கள் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகின்றன. இந்த ஹவுதிகள் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கப்பல்களை குறிவைத்து தாக்கினர். இதனால் கோபமான டொனால்ட் டிரம்ப் போர் கப்பல்கள் உதவியுடன் ஹவுதிகளின் சனாவில் தாக்குதல் நடத்தியது. இது 2025 மார்ச் மாதம் நடந்தது.

ஈராக்

அதேபோல் கடந்த மார்ச் மாதம் ஈராக்கின் அல்-அன்பார் மாகாணத்தை அமெரிக்கா தாக்கியது. அங்கு ஐஎஸ்ஐஎல் (ISIL) உறுப்பினரைக் கொன்றதாக சென்ட்காம் (CENTCOM) தெரிவித்தது. ஐஎஸ்ஐஎல்லின் இரண்டாவது தளபதி அப்துல்லா மல்லி முஸ்லிஹ் அல்-ரிஃபாய் மற்றும் மற்றொரு உறுப்பினரும் அமெரிக்க விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இந்த வரிசையில் 7 வது நாடாக தான் டிரம்ப் வெனிசுலாவை தாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+