Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"1500 வருஷம் பழையது.." தொலைந்து போன பைபிளின் அத்தியாயம்.. எப்படி கண்டுபிடித்தனர்! ஏன் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான ஒரு தொலைந்துபோன பகுதியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதை அவர்கள் எப்படிச் செய்தார்கள் என்பதைப் பார்க்கலாம்.

கிறிஸ்துவர்களின் புனித நூலாகப் பைபிள் கருதப்படுகிறது. அனைத்து கிறிஸ்துவர்களும் பைபிளில் கூறப்பட்டிருப்பதைத் தவறாமல் கடைப்பிடித்தே வருகிறார்கள்.

இதனிடையே சுமார் 1,500 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பைபிளில் இருக்கும் தொலைந்துபோன ஒரு பகுதியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதைக் கண்டறிய ஆய்வாளர்கள் புற ஊதா கதிர்களை எல்லாம் பயன்படுத்த வேண்டி இருந்துள்ளது. கையெழுத்து பதவியில் பல அடுக்குகளை ஊடுருவ அவர்கள் புற ஊதா கதிர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

 How researchers found Hidden Bible Chapter Unearthed 1,500 Years Later Using UV Light

ஆய்வாளர்கள்: இந்த புதைக்கப்பட்ட அத்தியாயத்தை ஆஸ்திரிய அகாடமி ஆஃப் சயின்ஸில் இடைக்காலம் குறித்து ஆய்வு செய்து வரும் கிரிகோரி கெசெல் என்பவர் கண்டறிந்துள்ளார். "டபுள் பாலிம்ப்செஸ்ட்" என்று அழைக்கப்படும் உரையின் மூன்று அடுக்குகளுக்கு அடியில் இது இருக்கும் நிலையில், அவர் இதைக் கண்டுபிடித்துள்ளார். Gospelsஇன் ஆரம்பக்கால மொழிபெயர்ப்புகளில் ஒன்றில் இருந்த பகுதியைத் தான் அவர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து ஆய்வாளர் கிரிகோரி கெஸ்ஸல் கூறுகையில், "சிரியாக் கிறிஸ்தவத்தின் பாரம்பரியத்தை நாம் ஆய்வு செய்தால் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் பல மொழிபெயர்ப்புகள் இருப்பதை நம்மால் அறிய முடிகிறது. இதுவரை Gospels பழைய சிரியாக் மொழிபெயர்ப்பு இரண்டு கையெழுத்துப் பிரதிகளில் மட்டுமே இருப்பதாகக் கருதினோம். ஆனால், அதைப் பொய்யாக்கும் வகையில் இப்போது நாம் இந்த மூன்றாவது பிரதியைக் கண்டறிந்துள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

2 இல்லை மூன்று: இதுவரை கண்டறியப்பட்ட இரண்டு பிரதிகளில் ஒன்று லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.. மற்றொன்று சினாய் மலையில் உள்ள செயின்ட் கேத்தரின் மடாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் இப்போது மூன்றாவது கையெழுத்துப் பிரதியின் சில பகுதிகள் சினாய் பாலிம்ப்செட்ஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து இன்ஸ்டிடியூட் ஃபார் மீடியேவல் ரிசர்ச் நிறுவனத்தின் இயக்குநர் கிளாடியா ராப் கூறுகையில், "கிரிகோரி கெசெல் இப்போது மிகப் பெரிய கண்டுபிடிப்பு ஒன்றைச் செய்துள்ளார். இந்த டாபிக்கில் அவருக்கு மிக ஆழமான அறிவின் காரணமாக அவரால் இப்படியொரு சிறந்த கண்டுபிடிப்பைச் செய்ய முடிந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

 How researchers found Hidden Bible Chapter Unearthed 1,500 Years Later Using UV Light

இப்போது நம்மிடம் இருக்கும் பழமையான கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகளைக் காட்டிலும் இது ஒரு நூற்றாண்டிற்கு முன்பே எழுதப்பட்டதாகும். இப்போது எஞ்சியிருக்கும் சிரியாக் மொழிபெயர்ப்பு என்பது 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். இடைக்கால கையெழுத்துப் பிரதிகளைக் கையாளும் போது, ​​நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் பயனுள்ளதாகவும் முக்கியமானதாகவும் இருக்கும் என்பதையே இது காட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

காகித பயன்பாடு: 1,300 ஆண்டுகளுக்கு முன்பு அந்த காலகட்டத்தில் காகித புழக்கம் மிகவும் குறைவாகவே இருந்தது. அப்போது காகிதம் இவ்வளவு எளிதாகவும் பரவலாகவும் உருவாக்கப்படாமலேயே இருந்தது. குறிப்பிட்ட சிலரால் மட்டுமே காகிதம் உருவாக்க முடிந்தது. அதுவும் மிகக் குறைந்த அளவுக்கு மட்டுமே காகிதங்கள் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக அப்போது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பக்கங்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தினார்கள்.

இதன் காரணமாகவே இப்போது புற ஊதா கதிர்களைப் பயன்படுத்தி உள்ளே இருக்கும் பிரதிகளைக் கண்டறிய வேண்டி இருந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+