ஷேக் ஹசீனா அரசை கவிழ்த்ததே அமெரிக்கா தான்? வங்கதேசத்துக்கு ஸ்கெட்ச் போட காரணமான சீனா! பகீர் பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் USAID வழியாக வழங்கப்படும் நிதி என்பது அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது அந்த அமைப்பு வழங்கிய நிதி பற்றிய பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா செய்த சதிவேலை பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதனை டிரம்புக்கு நெருக்கமான அமெரிக்கா வெளியுறவுத்துறையின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்றார். அதன்பிறகு அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் தற்போது பெரும் பேசும் பொருளாக மாறி இருப்பது USAID(United States Agency for International Development) ஏஜென்சி இழுத்து மூடியது தான்.

Bangladesh USIAD

அமெரிக்க அரசு சார்பில் யுஎஸ்ஏஐடி எனும் சர்வதேச நாடுகளின் வளர்ச்சிக்காக அமெரிக்க ஏஜென்சி செயல்பட்டு வந்தது. இது அமெரிக்காவில் சுதந்திரமான ஒரு அமைப்பாகும். இந்த ஏஜென்சி என்பது அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை வைத்து பிற நாடுகளில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் அமைப்புகள் மற்றும் பிற நாடுகளின் மேம்பாட்டுக்கு வழங்கி வந்தது.

கடந்த 2023ல் மட்டுமே 4 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியை இந்த ஏஜென்சி வழங்கி உள்ளது. இதனை டொனால்ட் டிரம்ப் விரும்பவில்லை. அதோடு அமெரிக்கர்களின் பணம் என்பது தேவையின்றி செலவு செய்யப்படுகிறது என்று கூறினார். அதுமட்டுமின்றி யுஎஸ்ஏஐடி ஏஜென்சி சார்பில் வழங்கப்படும் நிதியுதவிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். அதோடு யுஎஸ்ஏஐடி சார்பிலான பணிகளை நிறுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் எலான் மஸ்க். அவர் தான் அமெரிக்காவின் DOGE ( Department of Government Efficiency) என்ற பெயரில் அழைக்கப்படும் துறையின் தலைவராக உள்ளார்.

தமிழில் இந்த துறையை செயல்திறன் துறை என்று அழைக்கலாம். அமெரிக்காவின் பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வரும் இந்த துறை வழங்கிய அறிக்கையை தொடர்ந்து தான் யுஎஸ்ஏஐடி ஏஜென்சியின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த USAID யாருக்கெல்லாம் நிதி ஒதுக்கியது என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஏஜென்சி பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பு, பிரிவினைவாதிகளுக்கு நிதியை ஒதுக்கி உள்ளது. மனிதாபிமான உதவிகள் மற்றும் பிரச்சனையில் உள்ள நாடுகளை மீட்கும் பணிக்கும் நிதி ஒதுக்கி உள்ளது.

இப்படியான சூழலில் தான் தற்போது இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை கூறியவர் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக 2017 முதல் 2021 ஜனவரி வரை அதிபராக இருந்தார். அப்போது வெளியுறவுத்துறையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் மைக் பென்ஸ் தான். தற்போது அவர் கூறியுள்ள தகவல் என்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதாவது வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்துள்ளது. தற்போது அங்கு இடைக்கால அரசு நடந்து வருகிறது. முகமது யூனுஸ் என்பவர் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ளார்.

முன்னதாக ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்க்க அமெரிக்க நடவடிக்கை எடுத்தது என்று அவர் கூறியுள்ளார். இதுபற்றி மைக் பென்ஸ் கூறியதாவது: ஊடக செல்வாக்கு, சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட தகவல்களை பொதுமக்களை அதிகமாக பார்க்க வைப்பது, எதிர்க்கட்சிகளுக்கு நிதி வழங்குவது உள்பட பல்வேறு விஷயங்களை USAID செய்துள்ளது. பல நாடுகளின் தேர்தல் மற்றும் அரசை கவிழ்ப்பு நவடிக்கைகளில் அமெரிக்க ஏஜென்சி ஈடுபட்டுள்ளது.

வங்கதேசத்தில் உள்நாட்டு அரசியலில் அமெரிக்கா தலையிட்டுள்ளது. வங்கதேசம், சீனாவுடன் இணக்கமாக செயல்பட நினைத்தது. இது ஆசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வங்கதேசத்தில் ராணுவ தளம் அமைக்க அமெரிக்கா விரும்பியது. ஆனால் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மறுத்துவிட்டார். இது அமெரிக்காவை கோபப்படுத்தியது. இதனால் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்தது.

2019ம் ஆண்டில் வங்கதேசத்தி்ல நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எதிர்க்கட்சியான கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சி வெற்றி பெற வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது. ஆனால் அப்படி நடக்கவில்லை. ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமரானார்.
இதனால் அமெரிக்காவின் நிதி உதவியுடன் இயங்கும் தேசிய ஜனநாயக அறக்கட்டளையின் ( National Endowment for Democracy) அரசியல் பிரிவான சர்வதேச குடியரசு கட்சி வங்கதேச அரசியலை முடக்கும் பணியை தொடங்கியது. இதற்கான அறிக்கையை 2019-2020ல் தாக்கல் செய்தது.

அதன்படி வங்கதேச அரசுக்கு எதிராக செயல்படும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். சிறுபான்மையினர் ஒன்றிணைக்கப்பட்டன. கலாசாரம் மற்றும் இனம் சார்ந்த பதற்றத்தை சமூகத்தில் உருவாக்கப்பட்டன. குறிப்பாக வங்கதேசத்தில் ‛ரேப்' பாடல் குழுவினருக்கு அதிக நிதி வழங்கப்பட்டது. வங்கதேச அரசுக்கு எதிராக வீதி வீதியாக பாடல் பாடி பிரசாரம் செய்ய நிதி கொடுக்கப்பட்டது. இந்த பாடல்கள் மாணவர்கள் மற்றும் இளம்வயது சமூக ஆர்வலர்களை போராட்டத்துக்கு தூண்டும் வகையில் இருந்தது'' என்றார்.

அதன்பிறகு அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஆட்சி நிறைவு பெற்றது. ஜோ பைடன் அதிபரானார். கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு முகமது யூனுஸ் தலைமையில் தான் வங்கதேசத்தில் இடைக்கால அரசு என்பது அமைந்தது. இதில் முகமது யூனுஸ் அமெரிக்கா தலைவர்களுடன் நெருக்கம் கொண்டவர். ஜனநாயக கட்சியின் மாஜி அதிபர் பில் கிளின்டன், அவரது மனைவி ஹிலாரி கிளின்டன் ஆகியோருடன் நெருக்கம் கொண்டவர். இந்த கட்சியை சேர்ந்தவர் தான் ஜோ பைடன். இதனால் தான் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அமெரிக்கா அதனை மறுத்தது.

இப்படியான சூழலில் தான் பல்வேறு நாடுகளின் அரசியல் விவகாரங்களில் அமெரிக்கா நிதி உதவி பெறும் அமைப்பினர் தலையீடு இருந்ததாகவும், வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டும் பணியை அமெரிக்க நிதி உதவியுடன் செயல்படும் அமெரிக்கள் மூலம் மேற்கொண்டதாகவும் மைக் பென்ஸ் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

இந்த குற்றச்சாட்டை சுமத்தி உள்ள மைக் பென்ஸ் யார் என்றால் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை முன்னாள் அதிகாரி ஆவார். இந்த மைக் பென்ஸ்சர்வதேச கம்யூனிகேஷன் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணை உதவி செயலாளராக கடந்த 2020ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பணியாற்றி இருந்தார்.

இவரது பணி என்னவென்றால் சைபர் விஷயத்தில் அமெரிக்காவின் கொள்கைகளை வகுப்பது மற்றும் பிற பெரிய நிறுவனங்களுடன் நெருக்கமாக செயல்படுவது என்பதாகும். இந்த பணிக்கு முன்பாக அவர் அமெரிக்க வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்புக்கு Speech Writer ஆகவும், தொழில்நுட்பம் சார்ந்த அட்வைசராகவும் பணியாற்றினார். தற்போது மைக் பென்ஸ் பவுண்டேஷன் ஆஃப் ப்ரீடம் ஆன்லைன் என்ற லாப நோக்கமற்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+