”செய்றது எதுவுமே சரியில்லை” டிரம்பை தகுதி நீக்கம் பண்ணனும்.. களத்தில் இறங்கிய இந்திய வம்சாவளி எம்பி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று குற்றம் சாட்டியிருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்பி ஸ்ரீ தனேடர், டிரம்பை தகுதி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து உள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவேன் என அதிபர் தேர்தலின் போதே பிரசாரம் செய்தார்.

டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்
வெற்றி பெற்று அதிபர் ஆனதும் முதல் நடவடிக்கையாக அமெரிக்காவில் உரிய ஆவணம் இன்றி தங்கியவர்களை வெளியெற்றும் நடவடிக்கையை எடுத்தார். நூற்றுக்கணக்கான இந்தியர்களும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். அதுபோக தேர்தல் பிரசாரத்தில் தனக்கு பக்க பலமாக இருந்த எலான் மஸ்க்கிற்கு டாட்ஜ் எனப்படும் செலவின கட்டுப்பாட்டு துறை தலைவர் பொறுப்பை கொடுத்தார்.
எலான் மஸ்க்கும் பல்வேறு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை அமெரிக்கர்களுக்கே அதிருப்தி அளிக்கும் வகையில் கூட அமைந்து இருந்தது. குறிப்பாக பரஸ்பர விரி விதிப்பு விவகாரத்தில் டிரம்பிற்கு எதிராக பெரும் போராட்டம் அமெரிக்காவில் நடைபெற்றது.
டிரம்பை தகுதிநீக்கம் செய்யனும்
இந்த நிலையில்தான், இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்பியான ஸ்ரீ தனேடர் டிரம்பிற்கு எதிராக தகுதி நீக்க தீர்மானத்திற்கு நோட்டீஸ் அளித்துள்ளார். டிரம்ப் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும், கொடுங்கோன்மை மற்றும் அரசியல் அமைப்பு மீறல்கள் நடப்பதாகடும் ஸ்ரீ தனேடர் கூறியுள்ளார்.
டிரம்பிற்கு எதிராக, தான் பதவி நீக்கம் ஆர்டிகிள் கொண்டு வரப்பட்டு இருப்பது பற்றி தனது எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது. பிறப்பின் மூலம் பெறும் குடியுரிமை, மனிதாபிமான உதவிகள் நிறுத்தம், நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் உள்ளிட்ட டிரம்பின் நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் ஆகும்.
இதற்கு மேல் பொறுக்க முடியாது
இதற்கு மேல் பொறுக்க முடியாது என்பதால் டிரம்பிற்கு எதிராக தகுதிநீக்க தீர்மானம் அறிமுகம் செய்துள்ளேன்" என்றார். நீதி நடைமுறையில் குறுக்கீடு, அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம், சட்டவிரோத அரசு அலுவலகங்களை உருவாக்குதல் தவறான நடத்தை என ஏழு குற்றச்சாட்டுக்களை வைத்து இந்த தீர்மானத்தை இந்திய வம்சாவளி எம்பி அறிமுகம் செய்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையிலும் பிரநிதிதிகள் அவையிலும் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கே பெரும்பான்மை உள்ளது. இதனால், இந்த தீர்மானம் நடைமுறைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீ தனேடர் அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள 13 மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த இந்திய வம்சாவளி
தென் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீ தனேடர், அமெரிக்காவுக்கு கடந்த 1979 ஆம் ஆண்டு உயர் படிப்புக்காக குடி பெயர்ந்தார். அக்ரோன் பல்கலைக்கழகத்தில், வேதியியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். 1998 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர் தொழில் துறையில் சாதனை படைத்தார்.












Click it and Unblock the Notifications