அம்மாடி.. அப்படியே நடக்குதே.. இஸ்ரேல் யுத்தம்.. அன்றே சொன்ன பாபா வாங்கா.. அடுத்து 3ஆம் உலக போர்?
வாஷிங்டன்: வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்த பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று இப்போது டிரெண்டாகிறது. இஸ்ரேல் போர் ஆரம்பித்துள்ள நிலையில், பாபா வாங்காவின் அந்த கணிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
எதிர்காலம் குறித்து அறிந்து கொள்ள இங்கே அனைவருக்குமே ஆர்வம் இருக்கவே செய்யும். ஜாதகம் தொடங்கி இங்கே பல்வேறு விஷயங்களும் இப்போதும் டிரெண்டிங்கில் இருக்க எதிர்காலம் குறித்துக் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற நமது ஆர்வமே காரணமாக இருக்கிறது.

அப்படி எதிர்காலம் குறித்து துல்லியமாகக் கணித்துச் சொன்னவர் பாபா வாங்கா.. இதுபோன்ற பல கணிப்புகள் இருந்தாலும் கூட, இவரைப் போல யாரும் இந்தளவுக்குத் துல்லியமாகப் பெரிய நிகழ்வுகளைக் கணித்ததே இல்லை.
பாபா வாங்கா: இந்த பாபா வாங்காவின் இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா. ஒட்டமான் பேரரசில் 1911ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1996 வரை வாழ்ந்துள்ளார். இவருக்கு 12 வயதாக இருந்த போதே மின்னல் தாக்கியதில் இவர் தனது கண் பார்வையை இழந்தார். அவரது கண் பார்வை போனாலும், அதன் பின்னரே அவரால் எதிர்காலத்தைப் பார்க்க முடிந்ததாக அவரது பாலோயர்ஸ்கள் கூறுகின்றனர். இவர் 1996இல் மறைந்தார்.
இதுபோல கடந்த காலங்களில் பலர் கணித்திருந்தாலும் இவர் தனித்தே தெரிகிறார். அதற்கு முக்கிய காரணம் இவர் துல்லியமாகக் கணித்தவை எல்லாம் ஏதோ சின்ன சின்ன விஷயங்கள் இல்லை. இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு என இவர் கணித்த மிகப் பெரிய சர்வதேச நிகழ்வுகள். அவ்வளவு ஏன் இளவரசி டயானா மரணம், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட விஷயங்களைக் கூட அவர் துல்லியமாகக் கணித்துள்ளார். இவரது கணிப்புகள் 80-85% வரை துல்லியமாக நடந்துள்ளது.

அந்த 2 கணிப்புகள்: இதற்கிடையே இந்த 2023 ஆண்டிற்கான இவரது கணிப்புகளில் இரண்டு இப்போது முக்கியமானதாக இருக்கிறது. முதலில் அவர் இந்தாண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளார். அடுத்து அணு ஆயுதங்களும் கூட பயன்படுத்தப்படும் எனக் கணித்துள்ளார். இதில் முதலாம் கணிப்பு முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் இப்போது இஸ்ரேல்- ஹமாஸ் படைக்கு இடையே போர் ஆரம்பித்துள்ளது.
இதில் உலக நாடுகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து போக வாய்ப்புகள் அதிகம். இது அடுத்த மூன்றாம் உலகப் போருக்கும் கூட வழிவகுக்க வாய்ப்பு இருக்கிறது. உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன. ஓரிரு நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்தது. மற்ற நாடுகள் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால் இஸ்ரேல் போரில் அப்படி இல்லை.
உலகப் போர் ஆபத்து: மேற்குலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது. அதேநேரம் அரபு நாடுகள், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. போர் தொடரும்பட்சத்தில் அதில் மற்ற நாடுகள் உள்ளே வரலாம். குறிப்பாக இஸ்ரேல் நாட்டில் அமெரிக்கர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் நிச்சயம் அமெரிக்கா உள்ளே வரும். ஒரு வல்லரசு நாடு உள்ளே வந்தால் இது அடுத்த உலகப் போரை நோக்கிய நம்மை இட்டுச் செல்லும் என்பது வல்லுநர்கள் கருத்து.
அதேபோல போர் என்று வந்துவிட்டால் அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தவும் வாய்ப்புகள் மிக அதிகம். இதன் காரணமாகவே எங்குப் பாபா வாங்காவின் கணிப்புகள் உண்மையாகிவிடுமோ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications