இஸ்ரேல் மீது அணு குண்டை வீசும் ஈரான்? திடீரென உள்ளே வந்த அமெரிக்க உளவு படை இயக்குநர்.. பதற்றம்
வாஷிங்டன்: இஸ்ரேல் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ஈரான் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இது சர்வதேச அரசியலையே மொத்தமாகப் புரட்டிப் போடுவதாக இருக்கிறது. அதிலும் கடந்த அக். 5ம் தேதி ஈரான் பாலைவனத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமும் அணுக் குண்டு சோதனை தான் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் இயக்குநர் இது தொடர்பாகப் பதிலளித்துள்ளார்.
மத்திய கிழக்குப் பகுதியில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. சரியாக ஓராண்டிற்கு முன்பு இது இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போராகத் தொடங்கியது. ஆனால், இப்போது பல நாடுகள் இதில் உள்ளே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தாக்குதல்: இஸ்ரேல் ஏற்கனவே ஹமாஸை தொடர்ந்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு மீதும் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். இடையில் ஏமனில் உள்ள ஹவுதிகள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர். இந்தச் சூழலில் தான் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக ஈரானும் உள்ளே வர அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம்: இதற்கிடையே இஸ்ரேல் மீது அணுக் குண்டை வீச ஈரான் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஈரான் அணு குண்டை தயாரிக்கும் சோதனைகளிலும் இறங்கியுள்ளதாகச் சொல்லப்பட்டது. கடந்த அக். 5ம் தேதி ஈரான் பாலைவனத்தில் திடீரென சிறியளவில் பூகம்பம் ஏற்பட்டது. வழக்கமா அணு ஆயுத சோதனைகளின் போது இதுபோல சிறிய பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஈரான் அணு ஆயுதத்தையே சோதனை செய்ததாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையே அமெரிக்க உளவுப்படையான சிஐஏ இது குறித்து சில முக்கிய தகவல்களைக் கூறியுள்ளது.
அதேநேரம் ஈரான் அணு குண்டை தயாரிக்க வாய்ப்பே இல்லை என்று அமெரிக்க உளவுப்படையான சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் மறுத்துள்ளார். ஒருவேளை ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்து இருந்தால் அதை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் கண்டுபிடித்து இருக்க முடியும் என்ற அவர், ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா சிஐஏ: ஜார்ஜியாவில் நடந்த சைஃபர் ப்ரீஃப் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய பர்ன்ஸ் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மேம்படுத்தி வருகிறது. அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் அளவுக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்து சேமித்து வைத்துள்ளது. ஈரான் நினைத்தால் விரைவாக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முடியும்.
ஆனால், அதற்கான ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ஈரானிடம் இப்போது அணு ஆயுதங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேநேரம் அவர்கள் அதற்கு நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது. கடந்த 2018ல் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. அதன் பிறகு செறிவூட்டப்பட்ட யூரேனியத்தின் உற்பத்தியை ஈரான் அதிகரித்து வருகிறது. இப்போது அணு ஆயுதங்களை உருவாக்கத் தேவையான அளவுக்கு யூரேனியத்தை செறிவூட்டுவதில் நெருங்கிவிட்டனர் என சொல்லலாம்.
உருவாக்கவில்லை: இன்னும் சில வாரங்களில் அவர்கள் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் அளவுக்குத் தேவையான யூரேனியத்தை உருவாக்கலாம். ஆனால், தற்போது வரை அவர்கள் அணு ஆயுதங்களை உருவாக்கியதாகத் தெரியவில்லை. இதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். நாங்கள் அவர்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.
ஒருவேளை அவர்கள் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்தால் அதை எங்களால் முன்கூட்டியே கண்டுபிடித்து இருக்க முடியும். அதாவது ஈரானிடம் இப்போது அணு ஆயுதங்கள் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அதேநேரம் வரும் காலத்திலும் இதே நிலை தொடரும் என்பதைச் சொல்ல முடியாது" என்றார்












Click it and Unblock the Notifications