ஐநா செய்தியாளர் சந்திப்பில் 'பல்ப்'! பாக்.முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் உளறலை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ, ஐ.நா செய்தியாளர் சந்திப்பில், இந்தியா மீது தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதற்கு எதிராக, இந்தியா தரப்பு நியாயத்தை குறிப்பிட்டு பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பூட்டோ பதில் சொல்ல முடியாமல் திணிறியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ஐ.நா செய்தியாளர் சந்திப்பில், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, "இந்தியாவில் முஸ்லிம்களைப் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது. இது அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது" என்று பூட்டோ குற்றம் சாட்டினார். உடனே மூத்த பத்திரிகையாளர் அகமது ஃபத்தி, "நீங்கள் இப்படி சொல்கிறீர்கள், ஆனால், இந்திய ராணுவம் மிக உயர்ந்த பொறுப்பில் முஸ்லீம்களை வைத்திருக்கிறது. பஹல்காம் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தது கூட முஸ்லீம் அதிகாரிதான்" என்று கர்னல் சோஃபியாவை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார்.

Bilawal Bhutto Pakistan india Pakistan

இதற்கு பூட்டோவிடம் பதில் இல்லை. அதற்குப் பதிலாக, அவர் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பிலாவல் பூட்டோ, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இதற்கு முன் அவர் வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். ஐ.நா. பத்திரிகையாளர் சந்திப்பின்போது, காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அளவில் எழுப்புவதில் பாகிஸ்தான் எதிர்கொள்ளும் தடைகள் பற்றி அவர் விவரித்திருந்தார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, சர்வதேச நாடுகளுக்கு தனது தரப்பு நியாயத்தை எடுத்து சொல்ல இந்தியா, எம்பிக்கள் குழுவை அனுப்பி வைத்திருக்கிறது. இதை பார்த்த பாகிஸ்தானும் வெளிநாடுகளுக்கு தூதுக்குழுக்களை அனுப்பியது. இதில் ஒரு குழுவிற்கு பிலாவல் பூட்டோ தலைமை தாங்கினார்.

பிலாவல் பூட்டோ தனது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டும் விதமாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பது இது முதல்முறை கிடையாது. பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட பிறகு, சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியபோது, "சிந்து நதி எங்களுடையது. அது எப்பொழுதும் எங்களுடையதாகவே இருக்கும். ஒன்று எங்கள் நீர் அதில் பாயும், அல்லது இந்தியர்களின் இரத்தம் பாயும்" என்று பேசியிருந்தார்.

பூட்டோவின் இந்த பொறுப்பற்ற கருத்துக்கு AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்தார். "இப்படிப்பட்ட முட்டாள்தனமான பேச்சுக்களைக் கண்டு கொள்ளாதீர்கள். அவரது தாத்தாவுக்கு என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியாதா? அவரது தாய்க்கு என்ன ஆனது? அவரது தாயை தீவிரவாதிகள் கொன்றார்கள். எனவே, அவர் இப்படிப் பேசக்கூடாது. அமெரிக்கா உங்களுக்கு ஏதாவது உதவி செய்தால்தான் நாட்டையே நடத்த முடியும். இப்படி இருக்கும் நீங்கள் எங்களைப் பார்த்து விமர்சிக்கிறீர்கள்" என்று ஓவைசி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+