வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசியல்சாசன உரிமைக்கு எதிரானது.. பாசிச நடவடிக்கை.. லாக்டவுனுக்கு எதிராக பிரபல தொழிலதிபர் கொந்தளிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: லாக்டவுன் என்பது அரசியல் சாசனம் கொடுத்த உரிமைகளுக்கு எதிரானது என கொந்தளித்துள்ளார், முன்னணி தொழிலதிபரான, டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க்.

Recommended Video

    உலகத்தை உலுக்கிய கொள்ளை நோய்கள்... இனியாவது மாறுவோமா?

    கொரோனா வைரஸ் 'சிறைவாசம்' ஒரு பாசிச நடவடிக்கை மற்றும் ஒரு மோசமான நடவடிக்கை என்றும் அவர் அறிவித்தார். இது தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுவதோடு, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

    மின்சார கார் தயாரிப்பில் புகழ் பெற்றது டெஸ்லா. அமெரிக்காவில், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக, கலிபோர்னியாவில் கார் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு எலோன் மாஸ்க் தள்ளப்பட்டுள்ளார்.

    பாசிசம்

    பாசிசம்

    இந்த நிலையில்தான், அவர், இவ்வளவு கடுமையாகப் பேசியுள்ளார். உற்பத்தி எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்து கொஞ்சம் கவலையாக இருப்பதாகவும், எலோன் மஸ்க் கூறினார். "மக்கள் வீட்டிலேயே தங்க வைக்கப்பட வேண்டும், அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாது. ஒருவேளை வெளியேறினால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்வது பாசிசமாகும். இது ஜனநாயகமானது அல்ல. " என்று மஸ்க் கூறியுள்ளார்.

    அரசியலமைப்பு உரிமை

    அரசியலமைப்பு உரிமை

    மேலும் அவர் கூறியதாவது: மக்களை அவர்களின் வீடுகளில், வலுக்கட்டாயமாக சிறையில் அடைப்பதை போன்ற செயல்தான் லாக்டவுன். அவர்களின் அனைத்து அரசியலமைப்பு உரிமைகளுக்கும் எதிரான நடவடிக்கை இது. மக்களுக்கான சுதந்திரத்தை கொடூரமான மற்றும் தவறான வழிகளில் முடக்கியுள்ளோம். அமெரிக்காவை உருவாக்கியவர்கள், நோக்கத்திற்கே, எதிரானது.

    மக்கள் கோபம்

    மக்கள் கோபம்

    டெஸ்லாவுக்கு மட்டுமல்ல, எந்தவொரு நிறுவனத்திற்கும், லாக்டவுன் என்பது, பெரிய தீங்கு விளைவிக்கும். நிறைய சிறிய நிறுவனங்கள் மூடப்படும் என்பதால், மக்களுக்கும் இது பெரிய தொந்தரவுதான். மக்கள் இதனால் மிகவும் கோபப்படுவார்கள். தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான SpaceX நிறுவனரும் இதே மஸ்கின்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    ஆனால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டுமானால், இப்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த கூடாது என்று அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். இந்த நிலையில்தான் எலோன் மஸ்க் இவ்வாறு விளாசியுள்ளார்.

    English summary
    Tesla chief Elon Musk on Wednesday called the coronavirus confinement a fascist action that infringes on personal freedom and will damage the economy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X