"ரூ.8200 கோடி.." சத்யா நாதெல்லாவுக்கு அள்ளிக் கொடுக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம் தெரியுமா
வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் தலைவர் சத்யா நாதெல்லாவின் ஊதியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதைப் பார்த்து நெட்டிசன்கள் தலையே சுற்றுவதாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெல்லா இருக்கிறார். கடந்த 2014இல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக சத்யா நாதெல்லா பொறுப்பேற்றார்.

அவர் மைக்ரோசாஃப்ட் தலைவராகப் பொறுப்பேற்று 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அவரது ஊதியம் குறித்த தகவல்களை அங்குள்ள பிரபல ஊடகம் வெளியிட்டுள்ளது. அவரது ஊதியத்தைப் பார்த்து நெட்டிசன்கள் மிரண்டே போய்விட்டனர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இப்போது ஏஐ துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஏஐ துறையில் மைக்ரோசாஃப்ட் முதலீடுகளையும் அதிகப்படுத்தி வருகிறது. இதனால் அதன் பங்குகள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் சத்யா நாதெல்லாவின் ஊதியமும் புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. சத்யா நாதெல்லாவின் இந்த ஊதியம் என்பது அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடமிருந்து பெறும் அனைத்து பேஅவுட்களையும் உள்ளடக்கியதாகும்.
8,200 கோடி: ஷேர் போனஸ், சம்பளம், போனஸ் என மொத்தமாக அவருக்கு ஒரு பில்லியன் டாலர் வரை கிடைத்துள்ளதாம். அதாவது இந்திய மதிப்பில் இது ரூ.8,200 கோடியாகும்.. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பிறகு அவருக்கு ஏகப்பட்ட பங்கு போனஸ்கள் வழங்கப்பட்ட நிலையில், அதன் மதிப்பு அதிகரித்துள்ளது. இது குறித்த தகவல்களை ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் விளக்கியுள்ளது. அதேநேரம் அவரது செலவினங்கள், தனிப்பட்ட முதலீடுகளுக்குக் குறித்த தகவல்கள் இதில் எதுவும் இல்லை.
பங்குகள் பரிசு: கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அவர் $20 மில்லியன் (ரூ. 164 கோடி) மதிப்பிலான பங்குகளைப் பரிசாக அளித்துள்ளார். இருப்பினும் அவர் யாருக்கு இந்த பங்குகளைப் பரிசாக அளித்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. நதெல்லாவுக்கு ஒரு பில்லியன் டாலரும் அதிகமான நிகர மதிப்பு இல்லை என்று மைக்ரோசாப்ட் செய்தித் தொடர்பாளர் ஃபிராங்க் ஷா இதை மறுத்துள்ளார். நதெல்லாவின் சொத்து மதிப்பு குறித்து வெளிப்படையாகக் கருத்து கூறவும் அவர் மறுத்துவிட்டார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராகக் கடந்த 2014இல் நதெல்லா பொறுப்பேற்றார். அந்த காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் முக்கிய இடத்தை இழந்து வந்தது. கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனால் எங்கு டெக் உலகின் சூப்பர்பவராக இருந்த மைக்ரோசாப்ட் கடும் சரிவை சந்திக்குமோ என்று அஞ்சப்பட்டது.
ரொம்ப முக்கியம்: இருப்பினும் தலைவர் பொறுப்பேற்ற நாதெல்லா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நிறுவனத்தை மீட்டார். இதன் மூலம் நிறுவனத்தின் வருவாய் பல மடங்கு ஊர்ந்த நிலையில், இப்போது உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாக மைக்ரோசாப்ட் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஏஐ துறையில் இவர்கள் செய்தது மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
ஓபன் ஏஐ நிறுவனத்தில் இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோசாப்ட் முதலீடு செய்திருந்தது. இப்போது ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்ட சாட் ஜிபிடி தான் ஏஐ துறையில் முன்னணியில் இருக்கிறது. ஏஐ துறையின் ஒரு மைல்கல்லாகவே இது பார்க்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் டெக் துறையில் விட்ட இடத்தை இது பிடிக்க உதவியது. சத்யா நாதெல்லா செய்த மிக முக்கிய முடிவுகளில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications