நிலவுக்கு செல்லும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் ராக்கெட்டில் திடீர் கோளாறு.. கடைசி நேரத்தில் திட்டம் ரத்து!
வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசா அமைப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ் ராக்கெட்டின் லான்ச் நேரம் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
விண்வெளி குறித்தும் நிலவு குறித்தும் உலகெங்கும் உள்ள பல்வேறு ஆய்வு மையங்கள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாசாவும் நிலவு குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
நாசா ஏற்கனவே கடந்த 1969ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பி இருந்தது. இப்போது சுமார் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே முயற்சியில் நாசா ஈடுபட்டு உள்ளது.

நாசா
இதற்காக நாசா பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தச் சூழலில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தை நாசா இன்று சோதனை செய்கிறது. சந்திரன் குறித்து ஆய்வில் இது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சந்திர ஆய்வில் இது புதியதொரு சகாப்தமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. மனிதர்களை மீண்டும் விண்வெளிக்கு அழைத்துச் செல்வதில் இது முதல் படியாக இருக்கும்.

ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம்
இதற்காக நாசா மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டாக கருதப்படும் ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (எஸ்எல்எஸ்) என்ற ராக்கெட்டை உருவாக்கி உள்ளது. இதன் சோதனையின் ஒரு பகுதியாக முதலில் ஆளில்லா ஓரியனை சந்திரனை சுற்றி அனுப்ப இருந்தனர். இதற்கான பணிகள் அனைத்தையும் கச்சிதமாகச் செய்து முடித்து இருந்தது. இந்த முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றால், 2025க்குள் மீண்டும் விண்வெளிக்கு மனிதர்களை நாசாவால் அனுப்ப முடியும்.

ரத்து
இதன் முதற்கட்ட சோதனைக்காக ஆர்ட்டெமிஸ் என்ற நாசாவின் பவர்புல் ராக்கெட் நிலவுக்குப் புறப்படத் தயாராக இருந்தது. இந்திய நேரப்படும் மாலை 6 மணி அளவில் இந்த ராக்கெட் விண்ணில் பாய இருந்தது. இதற்காக ராக்கெட்டின் கவுன்டவுன்களும் ஆரம்பிக்கப்பட்டன. இந்தச் சூழலில் ராக்கெட் புறப்பட வெறும் 40 நிமிடங்களே இருந்த நிலையில், கவுன்டவுன் நிறுத்தப்பட்டு ராக்கெட் லான்ச் தள்ளி வைக்கப்பட்டது.

என்ன பிரச்சினை
ராக்கெட்டில் திரவ ஹைட்ரஜனையும் திர ஆக்சிஜனையும் இணைக்கும் பகுதியில் உள்ள இணைப்பில் ஏற்பட்ட திடீர் விரிசலே ராக்கெட் லான்ச் தள்ளி வைக்கப்படக் காரணமாகும். இந்த விரிசலைச் சீர் செய்யும் முயற்சிகளில் நாசா ஆய்வாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்பட்ட பின்னர், ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் சோதனை மீண்டும் நடத்தப்படும்.

ஆர்ட்டெமிஸ்
பல்வேறு கட்ட சோதனைக்குப் பின்னரே ஆர்ட்டெமிஸ் மூலம் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல நாசா திட்டமிட்டுள்ளது. மனிதர்கள் இருக்கும் அளவுக்குப் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்யச் சோதனையின் போது ஷான் ஆடு மற்றும் ஸ்னூப்பி பொம்மைகளை விண்வெளிக்கு நாசா அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications