"மூளையில் சிப்!" அழைக்கும் எலான் மஸ்க்! ஆனால் இதில் 10+ உயிரிழப்பு நடந்தது தெரியுமா! ஷாக் பின்னணி
வாஷிங்டன்: மூளையில் சிப் வைக்கும் ஆய்வுக்கு நியூரோலிங்க் நிறுவனம் ஆட்களைத் தேர்வு செய்யும் படலத்தை ஆரம்பித்துள்ளது. எலான் மஸ்கின் கனவுத் திட்டமாக அறியப்படும் இது குறித்துக் கூடுதல் தகவல்களைப் பார்க்கலாம்.
உலகின் டாப் பணக்காரராக இருப்பவர் எலான் எஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பெஸ் எக்ஸ், ட்விட்டர் எனப் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். அப்படி இவர் நடத்தி வரும் மற்றொரு அதிக பிரபலமில்லாத நிறுவனம் நியூரோலிங்க்.

இந்த நியூரோலிங்க் அவரது மற்ற நிறுவனங்களைப் போல இல்லாமல், சைலெண்டாக பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகிறது. மனிதக் குலத்தை மாற்றிப்போடுவதாக இந்த நியூரோலிங்க் இருக்கும் என்பதே எலான் மஸ்கின் வாதம்.
மூளையில் சிப்: இதற்கிடையே கடந்த வாரம் எலான் மஸ்கின் இந்த சர்ச்சைக்குரிய நியூராலிங்க் நிறுவனம் மனிதர்கள் மூளையில் சிப் பதிக்கும் சோதனைக்கு அழைப்பு விடுத்துள்ளது. சுமார் 6 ஆண்டுகள் வரை இந்த சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது. முதுகு தண்டுவடத்தில் காயம் அல்லது பாதிப்பால் நகரவே முடியாதவர்களுக்கு இது உதவும் என்பதே எலான் மஸ்கின் விளக்கமாக இருக்கிறது.
அதாவது அறுவை சிகிச்சை ரோபோ மூலம் சிப் ஒன்று மனித மூளையில் பொருத்தப்படும். அது நோயாளிகளின் மூளையில் இருக்கும் டேட்டாக்களை வயர்லெஸ் மூலம் வெளியே உள்ள கணினிக்கு அனுப்பும். இதன் மூலம் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பால் நகரவே முடியாமல் இருப்போரால் கணினி, லைட், பேன் உள்ளிட்டவற்றை நேரடியாக கண்டிரோல் செய்ய முடியும். இதுவே நியூரோலிங்கின் இறுதி இலக்கு. இதற்காகத் தான் இப்போது தன்னார்வலர்கள் வேண்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
எதிர்ப்பு ஏன்: இருப்பினும், இந்த அறிவிப்பு வந்தவுடனேயே இந்த ஆய்வுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற மற்றொரு தரப்பினர் குரல் கொடுக்க தொடங்கினர். நியூராலிங் உருவாக்கிய கருவி போதியளவில் பாதுகாப்பாக இல்லை என்றும் இதனால் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். இது குறித்து அமெரிக்க உணவு பாதுகாப்பு அமைப்புக்கு அவர்கள் கடிதமும் எழுதியுள்ளனர்.

உயிரிழப்பு: நியூரோலிங் நிறுவனம் மனிதர்கள் மீது 2019ஆம் ஆண்டிலேயே சோதனையைத் தொடங்கும் என எலான் மஸ்க் கூறியிருந்தார். இருப்பினும், அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த சிப்பை பொருத்துவதால் மூளையில் காயங்கள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. முதலில் குரங்குகளை வைத்து இதன் சோதனை நடத்தப்பட்ட போது சுமார் 10க்கும் மேற்பட்ட குரங்குகள் இந்த சிப்பால் உயிரிழந்தன. அதாவது சிப் பொருத்தப்பட்ட போது ஏற்பட்ட காயத்தில் தொற்று ஏற்பட்டு அந்த குரங்குகள் உயிரிழந்தன.
இதனால் அமெரிக்காவின் மருத்துவர்கள் அமைப்பு முதலில் மனிதர்கள் மீது சோதனை நடத்த ஒப்புக்கொள்ளவில்லை. ஓராண்டிற்கும் மேலாக அனுமதி மறுக்கப்பட்ட வந்தது. நீண்ட தாமதத்திற்குப் பிறகு இந்தாண்டு மே மாதம் தான் இதற்கு ஒப்புதல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க எலான் மஸ்கும் நியூராலிங்க் சோதனையின் போது சில குரங்குகள் உயிரிழந்தது உண்மை தான் என கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி கூறி அதிர்ச்சி அளித்தார்.
இருப்பினும், அதற்கும் மூளையில் சிப் பொருத்தப்பட்டதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். வெளிப்படையாகக் குரங்குகள் உயிரிழக்க என்ன காரணம் என்பதை அவர் விளக்கவில்லை என்ற போதிலும், உயிரிழந்த அனைத்து குரங்குகளும் ஏற்கனவே மரணத்திற்கு அருகில் இருந்ததாக தெரிவித்த மஸ்க், இதன் காரணமாகவே குரங்குகள் உயிரிழந்ததாகவும் இதற்கும் நியூரோலிங்க் சோதனைக்கும் தொடர்பில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications