டிரம்பால் கதறப்போகும் உக்ரைன்.. ரஷ்யாவை குஷிப்படுத்திய டிரம்ப்.. உத்தரவை கவனிச்சீங்களா
வாஷிங்டன்: ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. ரஷ்யாவை சமாளிக்க உக்ரைனுக்கு, அமெரிக்கா தான் உதவி செய்து வருகிறது. இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் அமெரிக்க போட்ட உத்தரவால் ரஷ்யா குஷியாகி உள்ளது. அதோடு உக்ரைனுக்கு இனி அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். டிரம்ப் கையெழுத்திட்ட கோப்பின் அடிப்படையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் பல்வேறு உதவிகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராணுவ உதவிகள் 2 நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது கடந்த 2023ம் ஆண்டில் மொத்தம் 60 பில்லியன் அமெரிக்க டாலரை வெளிநாடுகளில் மேற்கொள்ள வேண்டிய உதவிகளுக்காக அமெரிக்கா ஒதுக்கியது. இதனை தான் தற்போது நிறுத்தி உள்ளது. இதனால் பல நாடுகளில் சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைக்கான பயிற்சி, பாதுகாப்பு துறை சார்ந்த திட்டங்களுக்கு அமெரிக்காவின் உதவி கிடைக்காது. அதேபோல் இனி இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகிய 2 நாடுகளுக்கு மட்டுமே ராணுவ உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மற்ற நாடுகளுக்கு இந்த உதவிகள் கிடைக்காது என்பது சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவின் போரை உக்ரைன் அமெரிக்காவின் நிதி மற்றும் ஆயுத உதவியால் தான் சமாளித்து வருகிறது. இப்படியான சூழலில் டிரம்பின் இந்த அறிவிப்பு என்பது உக்ரைனுக்கு ராணுவ உதவி இனி இல்லை. உங்களை கைகழுவி விட்டோம் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது. இதனால் ரஷ்யா ஹேப்பியாகி உள்ளது.
ஏனென்றால் உக்ரைன், அமெரிக்காவின் உதவியால் தான் ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்தது. இனி அமெரிக்காவின் உதவி கிடைக்காது என்பதால் ரஷ்யா மகிழ்ச்சியாகி உள்ளது. அதேபோல் உக்ரைன் அதிர்ச்சியாகி உள்ளது. இருப்பினும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ‛‛அமெரிக்கா எங்களை கைவிடாது. தொடர்ந்து ராணுவ உதவிகள் கிடைக்கும்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டொனால்ட் டிரம்ப் தயாராக உள்ளனர். இருவரும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்படியான சூழலில் தான் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை விமர்சனம் செய்தார்.
‛‛மிகப்பெரிய சக்தி வாய்ந்த ரஷ்யாவுடன் போருக்கு போய் இருக்க கூடாது. இந்த போரை ஒரு ஒப்பந்தம் மூலம் தடுத்து இருக்கலாம் ஆனால் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நான் போராட விரும்புகிறேன் என்று ரஷ்யாவுடன் மோதி உள்ளார். ரஷ்யாவின் படை பலத்தை ஒப்பிட்டு பார்த்தால் உக்ரைன் போருக்கு சென்றிருக்க வேண்டாம். 2022ம் ஆண்டில் நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் நிச்சயம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தடுத்து இருப்பேன்'' என்று கூறியிருந்தார்.
இதன்மூலம் உக்ரைன் அதிபர் தான் ரஷ்யாவிடம் சமாதான ஒப்பந்தம் செய்யாமல் மோதி பார்க்க துணிந்ததாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதற்கிடையே தான் அமெரிக்காவின் ராணுவ உதவி என்பது இஸ்ரேல், எகிப்து நாட்டுக்கு மட்டும் தான் என்று டொனால்ட் டிரம்ப் அரசு அறிவித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications