வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எலான் மஸ்கின் ச்சீ ட்வீட்!ட்விட்டர் போலி கணக்குகள் விவகாரம்! பராக் அகர்வால் விளக்கத்தை ஏற்க மறுப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ட்விட்டர் தளத்தில் உள்ள போலி கணக்குகள் குறித்த பராக் அகர்வாலின் விளக்கத்திற்கு எலான் மஸ்க் பதிலடி கொடுத்துள்ளார்,

உலகின் மிக முக்கிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக ட்விட்டர் தளம் இருந்து வருகிறது. அனைத்து டாப் பிரபலங்களின் விருப்பமான தேர்வாக ட்விட்டர் தளமே இருந்து வருகிறது.

திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை! திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை!

இப்படிச் சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் கூட, ட்விட்டர் நிதி விவகாரம் அந்நிறுவனத்தின் போர்ட் உறுப்பின்மைகளுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்றே கூறப்பட்டது.

 எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இந்தச் சூழலில் தான் உலகின் நம்பர் டாப் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஒட்டுமொத்த ட்விட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் டாலருக்கு வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். முதலில் எலான் மஸ்கின் இந்த முயற்சியைத் தடுக்கவே ட்விட்டர் போர்ட் முயன்றது. இருப்பினும், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எலான் மஸ்கின் ஆஃப்ருக்கு ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துவிட்டனர்.

Recommended Video

    Twitter-Elon Musk Dealing-ல் திடீர் திருப்பம்! Temporarily Hold-ல் இருக்கு | OneIndia Tamil
    மாற்றம்

    மாற்றம்

    ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு ஷேரை சுமார் 54 டாலருக்கு எலான் மஸ்க் வாங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஓரிரு மாதங்களில் முழுமையாக முடியும் என்று கூறப்பட்டது. எலான் மஸ்க் கைகளில் ட்விட்டர் தளம் சென்றதும், அதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு, யாரும் எதிர்பார்க்காத வகையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அதே ட்விட்டர் தளத்தில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

     போலி கணக்குகள்

    போலி கணக்குகள்

    ட்விட்டர் தளத்தில் இருக்கும் 5% கணக்குகள் போலியானவை என்பதால் ஒப்பந்தம் நிறுத்திவைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தார். இது குறித்து அவர் தனது ட்வீட்டில், "ட்விட்டர் தளத்தில் இருக்கும் கணக்குகளில் சுமார் 5% போலிக் கணக்குகள் போலியானவை என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், ட்விட்டர் டீல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது" என்று ட்வீட் செய்துள்ளார். இதனிடையே இது தொடர்பாக ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

     விளக்கம்

    விளக்கம்

    இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "துரதிர்ஷ்டவசமாக, பொது மற்றும் தனிப்பட்ட தகவல்கள் கொண்டு கணக்கிட வேண்டிய குறிப்பிட்ட மதிப்பீடுகளை நிறுவனங்களுக்கு வெளியே உள்ளவர்களால் கணக்கிட முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. எந்த நாளில் எந்தெந்த கணக்குகள் ஆக்டிவ் யூஸர்களாக கணக்கிடப்படுகின்றன என்பதை நிறுவனத்திற்கு வெளியே இருக்கும் யாராலும் அறிய முடியாது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

     ச்சீ ரிப்ளே

    ச்சீ ரிப்ளே

    இதற்கு எலான் மஸ்க் முகம் சுளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார். பராக் அகர்வாலின் இந்த பதில் எலான் மஸ்க்கை திருப்திப்படுத்தும் வகையில் இல்லை போல. இதன் காரணமாக மனித மலத்தின் எமோஜியை அவர் ரிப்ளேவாக பதிவிட்டுள்ளார். மேலும் அவர், "அப்படியென்றால் விளம்பரதாரர்கள் தங்கள் பணத்திற்கு என்ன பெறுகிறார்கள் என்பதை எப்படி தான் அறிவார்கள்? இது ட்விட்டரின் நிதி நிலைக்கு அடிப்படையான ஒன்று" என்று ட்வீட் செய்துள்ளார்.

     பரபர கருத்து

    பரபர கருத்து

    இதற்கு பின்னர் மியாமியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய எலான் மஸ்க், "ட்விட்டர் தளத்தில் இருக்கும் கணக்குகளில் சுமார் 20 முதல் 25% கணக்குகள் போலியானதாக இருக்கும் என நினைக்கிறேன். இது குறித்து ரேண்டம் சோதனைகள் நடத்தி வருகிறோம். இதுவரை சோதனையில் அவர்கள் (ட்விட்டர் நிறுவனம்) கூறியதை போல போலிக் கணக்குகள் 5% மட்டுமே உள்ளது என்பதை நிரூபிக்க எவ்வித ஆதாரங்களும் இல்லை. சில நாட்களில் தினசரி ஆக்டிவ் யூஸர்களில் 90% வரை கூட போலிக் கணக்குகள் இருக்க வாய்ப்புள்ளது" என்றார்.

     பங்குகள் சரிவு

    பங்குகள் சரிவு

    தனியார் நிறுவனங்கள் ட்விட்டர் தளத்தில் இருக்கும் ஒட்டுமொத்த யூஸர்களில் 9% முதல் 15% வரை போலியானதாக இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். ட்விட்டர் தளத்தில் பயனர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களைப் பயன்படுத்திப் பதிவு செய்யத் தேவையில்லை கட்டாயமில்லை என்பதே இதில் முக்கிய பிரச்சினையாக உள்ளது. எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு காரணமாக ட்விட்டர் நிறுவனத்தில் பங்குகள் சுமார் 7% மேல் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Elon Musk's reply to Twitter CEO Parag Agrawal about spam accounts on the social media platform: (ட்விட்டர் தளத்தில் உள்ள போலி கணக்குகள் குறித்து பராக் அகர்வால் எலான் மஸ்க்) All things to know about Elon Musk twitter deal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X