இந்தியா-பாகிஸ்தான் போட்டி! சட்டென நடுவே பறந்த ஹெலிகாப்டர்! அதில் இருக்கும் வாசகத்தை நோட் பண்ணீங்களா
வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டியின் போது திடீரென பாகிஸ்தான் தொடர்புடைய போஸ்டர் ஒன்றுடன் விமானம் பறந்துள்ளது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தாண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த டி20 உலகக் கோப்பையில் பல ஷாக் முடிவுகள் நடந்துள்ளன.

குறிப்பாக லீக் போட்டியில் பாகிஸ்தான் டீமை அமெரிக்கா வீழ்த்தியது. அதேபோல நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. தென்னாப்பிரிக்கா vs நெதர்லாந்து போட்டியிலும், தென்னாப்பிரிக்கா தடுமாறியே வென்றது.
டி20 போட்டி: இந்தச் சூழலில் 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. அமெரிக்காவின் நியூயார்க் புறநகர்ப் பகுதியில் இந்தப் போட்டி நடைபெற்றது. மழை காரணமாகப் போட்டி தொடங்க தாமதமாகத் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 19 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்து ஆல் ஆவுட் ஆனது. அடுத்து பாகிஸ்தான் பேட் செய்தது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் எளிதாக வெல்லும் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், இந்திய பவர்கள்கள் சிறப்பான பவுலிங் மூலம் பாகிஸ்தானைக் கட்டுப்படுத்தினர். 20 ஓவர்கள் பேட் செய்த பாகிஸ்தானால் ஏழு விக்கெட்களை இழந்து 113 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே இந்தியா vs பாகிஸ்தான் டி20 போட்டி நடந்தபோது திடீரென நடுவானில் விமானம் ஒன்று பறந்துள்ளது. அதில் இருந்த வாசகம் தான் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. நடந்துள்ளது. இம்ரான் கான் கைதுக்கு எதிராகவும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற வாசகத்துடன் விமானம் ஒன்று பறந்துள்ளது.
இம்ரான் கான்: இது தொடர்பான வீடியோவை பிஐடி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. Release Imran Khan என்ற வாசகத்துடன் அந்த விமானம் நடுவானில் பறந்துள்ளது. இது குறித்து வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த போட்டோவை பகிர்ந்து இம்ரான் கான் கைதுக்கு எதிராகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சிறையில் இம்ரான் கான்: கடந்த 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான்.. 71 வயதான இம்ரான் கான் தோஷகானா வழக்கு, சைபர் வழக்கு மற்றும் இஸ்லாமுக்கு மாறான திருமணம் செய்தது உள்ளிட்ட வழக்கு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். கடந்த 1992இல் நடந்த உலகக் கோப்பையைப் பாகிஸ்தான் அணி வென்றிருந்தது. அப்போது பாகிஸ்தான் அணிக்கு இம்ரான் கான் தான் தலைமையேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த நேரத்தில் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரது கட்சியினருக்கும் பொது சின்னம் கூட வழங்கப்படவில்லை. இருப்பினும், அதை எல்லாம் தாண்டி அவரது கட்சி சுமார் 90 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்ற குறித்தும் பல சர்வதேச அமைப்புகள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் தான் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் என்ற இந்த பேனருடன் விமானம் பறந்துள்ளது.












Click it and Unblock the Notifications