அமெரிக்க நாடளுமன்ற வன்முறை... வன்முறையாளர்களை பொறி வைத்து பிடிக்கும் எப்.பி.ஐ!
வாஷிங்டன்: அமெரிக்க நாடளுமன்ற வன்முறையில் ஈடுபட்டவர்களை அவர்கள் பதிவான வீடியோவை வைத்து எப்.பி.ஐ. கைது செய்து வருகிறது.
அமெரிக்க நாடளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறையில் 5 பேர் பரிதமாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அபார வெற்றி பெற்றார். ஆனால் டொனால்ட் டிரம்ப் ,இந்த வெற்றியை ஏற்கவில்லை. தேர்தலில் மோசடிகள் நடந்ததாக குற்றம்சாட்டி அவரும், அவரது ஆதரவாளர்களும் போட்ட வழக்குகள் கோர்ட்டுகளில் செல்லுபடியாகவில்லை.
ஜோ பிடன் தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது. அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் இறந்தனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் நடந்த வன்முறை உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஏராளமானோர் தொடர்ந்து கைது செய்யபப்ட்டு வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை, வீடியோ காட்சிகளை வைத்து எப்.பி.ஐ. பொறி வைத்து பிடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வீடியோ காட்சிகளை வைத்து 2 வன்முறையாளர்களை எப்.பி.ஐ. கைது செய்துளளது.
வன்முறையின்போது கொம்புகள், ஒரு ஃபர் பெல்ட், ஃபேஸ் பெயிண்ட் மற்றும் அமெரிக்கக் கொடியால் அலங்கரிக்கப்பட்ட ஒரு ஈட்டியை முத்திரை குத்துவது போன்றவற்றில் முக்கியமாக இடம்பெற்ற ஜேக்கப் அந்தோனி சான்ஸ்லி என்பவர் கைது செய்யப்பட்டார். இதே போல் ஆடல் கிறிஸ்டியன் ஜான்சனையும் கைது செய்தனர்.
புளோரிடாவின் பாரிஷைச் சேர்ந்த ஜான்சன், கேபிட்டலின் அரங்குகளில் நடந்து செல்லும்போது தன்னைப் பற்றிய நேரடி வீடியோவை பேஸ்புக்கில் லைவ் செய்தார் என கூறப்படுகிறது. இந்த கலவரங்களில் பங்கேற்றவர்களில் இணையத்தில் வெளியான படங்களை அடையாளம் காண உதவுமாறு எஃப்.பி.ஐ பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications