டிரம்ப் இஸ் பேக்..சொந்தமாக ஒரு சமூக வலைத்தளம்.. அதிரடி திட்டங்கள்.. அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், தனக்கு என்று தனியாக ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கி ஆதரவாளருடன் தொடர்பில் இருக்கத் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் டிரம்பை ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தோற்கடித்தார். கடந்த 25 ஆண்டுகளில் அதிபர் ஒருவர் தேர்தலில் தோற்பது இதுவே முதல் முறையாகும்.
இருப்பினும், அதிபர் டிரம்ப் கடைசி வரை தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றதாக அவர் தொடர்ந்து குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்க வன்முறை
இந்தாண்டு ஜனவரி 6ஆம் தேதி புதிய அதிபரை அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதை எதிர்த்து தலைநகரில் பேரணியும் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு டிரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார். இதனால் டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இரண்டு காவலர்கள் உள்ளிட்ட சிலர் உயிரிழந்தனர்.

டிரம்ப் கணக்குகள் முடக்கம்
டிரம்ப் தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையிலேயே ட்வீட் செய்து கொண்டிருந்ததால் அவரது ட்விட்டர் கணக்கு முதலில் தற்காலிகமாக முடக்கப்பட்டது. பின்னர் விரைவிலேயே டிரம்பின் ட்விட்டர் பக்கத்தை நிரந்தமாக முடக்குவதாக ட்விட்டர் அறிவித்தது. அதைத்தொடர்ந்து பேஸ்புக், யூடியூப் போன்ற நிறுவனங்களும் இதேபோல டிரம்பிற்கு நிரந்தர தடை விதித்தது.

புதிய சமூக வலைத்தளம்
ட்விட்டர் கணக்கில் டிரம்ப் பயங்கர ஆக்டிவாக இருப்பார். பொதுவாகத் தனது ஆதரவாளர்களுடன் டிரம்ப் சமூக வலைத்தளங்களின் வழியிலேயே தொடர்பிலிருந்தார். இதனால் இந்தத் தடை டிரம்பின் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டது. ஜனவரி மாதம் புதிய அதிபர் பதவியேற்றது முதல் சைலென்ட் மோடிலேயே இருக்கும் டிரம்ப், விரைவில் தனக்கென புதிதாக ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டி
அதிபர் தேர்தலில் டிரம்பின் பிரசார குழு செய்தித்தொடர்பாளராக இருந்த ஜேசன் மில்லர், இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் டிரம்ப் தனக்கு என்று தனியாக ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கவுள்ளார் என்றும் இது ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டில் நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications