ஓஹியோ மாகாணத்திலேயே வெற்றி பெற்றாச்சு.. அப்போ டொனால்ட் ட்ரம்ப்தான் அதிபர்.. ஆதரவாளர்கள் குஷி
வாஷிங்டன்: எப்போதுமே அமெரிக்க அதிபரை தேர்வு செய்யும் மாகாணம் என்று வர்ணிக்கப்படும் ஓஹியோ மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் கைப்பற்றியுள்ளார்.
எப்போதுமே, அமெரிக்காவில் சில மாகாணங்கள் ஜனநாயகக் கட்சிக்கும், சில மாகாணங்கள் குடியரசு கட்சிகளுக்கும் தொடர்ந்து பல தேர்தல்களில் வாக்களித்து வருகின்றன. சில மாகாணங்கள் மட்டும்தான் ஸ்விங் ஸ்டேட், அல்லது பேட்டில் ஃபீல்டு என்று, அழைக்கப்படுகிறது.
அந்த மாகாண மக்கள் எந்த மாதிரி முடிவை எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதை பொறுத்துதான் அடுத்த அதிபர் யார் என்பது ஒவ்வொரு தேர்தலிலும் முடிவாகிறது.

ஓஹியோ சென்டிமென்ட்
ஓஹியோ மாகாணத்தை பொருத்த அளவில் அங்கு எந்த கட்சி பிரதிநிதிகளை பெறுகிறதோ, அந்த கட்சியைச் சேர்ந்தவர்தான் அதிபராக பதவியேற்பது இத்தனை வருடங்களாக வழக்கமாக இருந்து வருகிறது. இது ஒரு செண்டிமெண்ட் என்றும் பார்க்கப்படுகிறது. ஓஹியோ மாகாணத்தில் உள்ள 18 வாக்குகளை, டொனால்ட் ட்ரம்ப் பெற்றுள்ளார்.

டிரம்ப் பேச்சு
இந்த நிலையில்தான், இன்று வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டொனால்டு டிரம்ப், பென்சில்வேனியா, டெக்ஸாஸ், ஜார்ஜியா மாகாணங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். நமது வெற்றியை இது பகிரங்கமாக காட்டுகிறது.

தேர்தல் முறைகேடு
ஆனால் சில மாகாணங்களில் தேர்தல் முறைகேடுகள் நடப்பதால் ரிசல்ட் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. முறைகேடுகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று வாக்கு எண்ணிக்கைக்கு தடை பெற தயங்கமாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஓஹியோ முக்கியம்
ஓஹியோ எப்போதுமே, அமெரிக்க மக்களின் மனநிலையை பிரதிபலிக்கக் கூடியது என்பதும், டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஒரு சாதகமான அம்சமாக மாறி விட்டது. ஜோ பிடன் முன்னிலை பெற்றாலும், ஓஹியோ உள்ளிட்ட மாகாண வெற்றிகளை சுட்டிக்காட்டி, அமெரிக்க மக்களின் மனநிலைக்கு மாறாக ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது என்றும், எனவே, தேர்தலில், முறைகேடு நடந்துள்ளது என்றுதானே அர்த்தம் என்ற வாதத்தை முன் வைக்க ஆரம்பித்து விட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications