உள்ளே வந்த வடகொரியா.. உக்ரைனை காலி செய்ய ரஷ்யா பிளான்? அமெரிக்கா புது வார்னிங்! அப்போ உலக போர் தானா?
வாஷிங்டன்: உலகமே இப்போது உற்றுக் கவனிக்கும் மோதலாக ரஷ்யா உக்ரைன் போர் மாறியிருக்கிறது. இது கிட்டதட்ட 3வது உலகப் போரின் தொடக்கமாகக் கூட இருக்கலாம் என்று பலரும் எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே உக்ரைன் மோதலில் மிக விரைவில் வடகொரியாவும் இணையும் என்று சில பகீர் கருத்துகளை அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதல் கடந்த சில வாரங்களில் மொத்தமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். மேற்குலக நாடுகள் தங்கள் அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு தந்துள்ள நிலையில், ரஷ்யா அதற்கு மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறது.

ரஷ்யா: இதனால் அங்கு நிலவும் சூழலை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. இதற்கிடையே இந்த உக்ரைன் ரஷ்யா மோதல் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் தலைவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது ஏற்கனவே பல ஆயிரம் வடகொரிய வீரர்கள் ரஷ்யாவில் இருப்பதாகவும் அவர்கள் மிக விரைவில் உக்ரைன் நாட்டில் களமிறக்கப்படுவார்கள் என்று பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.
உலகின் மற்ற நாடுகளில் இருந்து வடகொரியா தனித்து இருந்தாலும் கூட, ரஷ்யா உடன் மட்டும் எப்போதும் நல்லுறவைக் கொண்டு இருக்கிறது. பல உதவிகளை வடகொரியாவுக்கு ரஷ்யா தொடர்ந்து செய்து வருகிறது. இதன் காரணமாகவே உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவ வடகொரியா தனது வீரர்களை அனுப்பி இருந்தது. இது தொடர்பாக முதலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்பே எச்சரித்து இருந்தார். இந்தச் சூழலில் கடந்த மாதம் இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியானது.
ஷாக் வீடியோ: ரஷ்ய ராணுவ யூனிபார்மை வடகொரிய வீரர்கள் வரிசையில் நின்று வாங்குவது போல அந்த வீடியோ இருந்தது. மேலும், ரஷ்யாவில் போர்ப் பயிற்சி செய்யும் வீடியோவும் இணையத்தில் வெளியானது. உக்ரைனில் இருக்கும் இந்த வடகொரிய வீரர்கள் மிக விரைவில் போரில் ஈடுபடுத்தப்படலாம் என்றும் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் அமெரிக்காவிடம் இருந்து இப்போது புதிய எச்சரிக்கை வந்துள்ளது.
சுமார் 10,000 வட கொரிய வீரர்கள் ரஷ்ய எல்லைப் பகுதியான குர்ஸ்கிலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மிக விரைவில் ரஷ்யா ராணுவத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின் கூறியிருக்கிறார்.
எச்சரிக்கை: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவர்கள் தேவையான பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். ரஷ்யா ராணுவத்துடன் அவர்களால் எளிதாக ஒருங்கிணைய முடியும். இதனால் அவர்கள் விரைவில் போரில் ஈடுபடுவார்கள் என்றே நான் நினைக்கிறேன். தற்போது வரை வடகொரிய வீரர்கள் போரில் நேரடியாக ஈடுபடவில்லை என்ற போதிலும், விரைவில் அவர்கள் போரில் களமிறக்கப்பட வாய்ப்பு மிக மிக அதிகம்" என்றார்.
வடகொரியாவுக்குக் கச்சா எண்ணெய், ஏவுகணைகள் மற்றும் பொருளாதார உதவிகளை ரஷ்யா செய்வதாகவும் அதற்குப் பதிலாக வடகொரியா தனது வீரர்களை அனுப்பி அனுப்பி ரஷ்யாவுக்கு உதவுவதாக தென்கொரிய அதிகாரிகளும் பிரபல சர்வதேச ஆய்வுக் குழு ஒன்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது..
மோதல்: வடகொரியா ராணுவம் முழுமையாக உள்ளே வந்தால் அது ரஷ்யாவுக்குச் சாதகமாக அமையும். உக்ரைன் பெரிய இன்னலில் தள்ளப்படும். அப்போது வேறு எதாவது உலக நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு நேரடியாக உதவ வந்தால் அது நிச்சயம் உலகப் போராக வெடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications