லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ.. தீயை அணைக்க சிறைக்கைதிகளை களமிறக்கிய அமெரிக்கா.. எதற்காக தெரியுமா?
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. தீயை அணைக்க கடும் பாடுபட்டு வரும் அமெரிக்கா, தற்போது, தீ அணைப்பு வீரர்களுடன் இணைந்து சிறைக்கைதிகளையும் ஈடுபடுத்தியுள்ளதாம். சிறைக்கைதிகளுக்கு என பிரத்யேக ஆரஞ்சு நிற யூனிபார்ம் வழங்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்களுக்கு உதவியாக இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் இரண்டு நாட்கள் தண்டனைக் காலத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறதாம்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் உள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ். புகழ்பெற்றவர்கள், கோடீஸ்வரர்கள் அதிகம் இங்கு தான் வசித்து வருகிறார்கள். லாஸ் ஏஸ்சல்ஸ் நகரில் கடந்த 8 மாதங்களாக வறட்சி நிலவி வந்தது. இதற்கிடையே சமீபத்தில் பலத்த காற்றும் வீசியது. மணிக்கு 80 கிமீ வேகத்தில் காற்று வீசியதாக கூறப்படுகிறது. இதனால் கிளைகள் ஒன்றுக்கொன்று மோதி கடந்த 7 ஆம் தேதி அன்று காட்டில் தீப்பிடித்தது.

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ
பலத்த காற்றும் வீசியதால், தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி எரியத் தொடங்கியது. தொடர்ந்து காடுகள் வீடுகள் அனைத்திலும் பரவி ஒரு வாரம் ஆகியும் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயால் அமெரிக்க பெரும் இழப்பை சந்தித்துள்ளது. கட்டுக்கடங்காமல் பரவி எரிந்து வரும் காட்டுத்தீயினை அணைக்க அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
சூறாவளிக் காற்று தொடர்ந்து வீசி வருவதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகிறார்கள். இதுவரை தீப்பிடித்த பகுதிகளில், 14 சதவீதம் மட்டுமே தீயினை கட்டுப்படுத்த முடிந்துள்ளது. மற்ற இடங்களில் இன்னும் தீ பரவி எரிந்து வருகிறது. இந்த தீ விபத்தில் இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர். பலரை காணாததால், மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்தும் வீரர்கள்
புகழ்பெற்றவர்கள் வசித்து வரும் பகுதி என்பதால் பல சொகுசு பங்களாக்கள், வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின. 14 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள், 50 க்கும் மேற்பட்ட விமானங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இதுபோக லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை கட்டுப்படுத்த கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் காற்று தொடர்ந்து வீசி வருவதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் காரணமாக சொகுசு பங்களாவில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை பாதுகாக்க, லட்சக்கணக்கில் செலவு செய்து தனியார் தீயணைப்பு வீரர்களை காவலாளிகள் போல வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளனர். தீ அருகே பரவி வந்தால் உடனடியாக அணைப்பதற்காக 24 மணி நேரம் காவல் காத்துக்கொண்டு வீட்டுமுன் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். கோடீஸ்வரர்கள் பலரும் இது போல் ஒவ்வொருவர் வீட்டின் முன்பும் பாதுகாவலர்கள் போல் தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீ அணைக்கும் பணியில் சிறைக்கைதிகள்
இதுவரை இந்த காட்டுத்தீயின் காரணமாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது என்றும், இன்னும் காட்டுத்தீயின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் அங்குள்ள வானிலை மையம் கூறியுள்ளது. அதாவது காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில், தீ அணைப்பு வீரர்களுடன் இணைந்து நூற்றுக்கணக்கான சிறைக்கைதிகளும் தீ அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரத்யேக யூனிபார்ம்
சிறைக்கைதிகளுக்கு என பிரத்யேக ஆரஞ்சு நிற யூனிபார்ம் வழங்கப்படுள்ளது. தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் உள்ளிட்ட பணிகளுக்கு பதிலாக இயந்திரம் இல்லாமல் கைகளால் இயங்க வைக்க கூடிய தீ அணைப்பு கருவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பிற எமெர்ஜென்சி பணியாளர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் பணியையும் மேற்கொள்கிறார்கள். சிறைச்சாலை நிறுவனத்தின்படி, தீயணைப்பு வீரர்களுக்கு உதவியாக இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் இரண்டு நாட்கள் தண்டனைக் காலத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அது மட்டும் இன்றி தீ அணைப்பு வீரர்களுக்கு உறுதுணையாக இருக்கும் சிறைக்கைதிகளுக்கு விடுதலையான பிறகு சாத்தியமான வேலை வாய்ப்புகள் அளிப்பதற்கும் வழி ஏற்படுத்தி கொடுக்கப்படுமாம். அவர்களின் குற்றவியல் பதிவு நீக்கம் மற்றும் பயிற்சி அளிப்பது ஆகியவை இதில் அடங்கும்.
கைதிகளை ஈடுபடுத்துவது முதல்முறையல்ல
சிறைக்கைதிகளை தீ அணைக்கும் பணிக்கு பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. 1915 ஆம் ஆண்டில் இருந்தே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறதாம். இதற்காக அப்போதே ஒரு விதி உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் கால கட்டத்தில் தீ அணைப்பு பணிகளுக்காக கைதிகள் பயன்படுத்தப்பட்டனர். தீ அனைப்பு அதிகாரிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்ட சமயத்தில் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கிட்டத்தட்ட 950 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தினமும் 10.24 டாலர் ஊதியமாக வழங்கப்படுகிறது. 24 மணி நேர ஷிப்ட் பார்ப்பவர்களுக்கு இன்னும் கூடுதலாக சம்பளம் வழங்கப்படுகிறது. கலிபோர்னியாவில் ஒரு நாளைக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச சம்பளத்தை விட இது குறைவு என்பதும் கவனிக்கத்தக்கது. கலிபோர்னியாவில் குறைந்தபட்ச சம்பளமாக மணிக்கு 16.50 டாலர் வழங்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications