"பேய்" போல சிரித்த காதலி.. பற்றி எரிந்த காதலனின் வீடு! அப்படியே மிரண்ட அதிகாரிகள்.. நள்ளிரவில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் தனது காதலனிடம் செய்த பகீர் காரியம், அங்குப் பலரையும் மிரளச் செய்துள்ளது.

காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். இந்த பழமொழிக்கு உலகெங்கும் இருந்து பல்வேறு உதாரணங்கள் இருக்கவே செய்கிறது. அதேபோல காதலை ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு மாதிரி கையாள்வார்கள்.

ஆனால், சில நேரங்களில் சில காதல் ஜோடிகள் செய்யும் செயல்கள் நம்மை மிரளச் செய்துவிடும். காதல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் செயல்களுக்கு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

காதல்

காதல்

இந்தக் காலத்தில் காதல் என்ற பெயரில் இளம் ஜோடிகள் செய்யும் செயல்கள் பலரையும் கடுப்பாக்கும். அதிலும் பொஸசிவ்னஸ் காரணமாக இவர்கள் செய்யும் செயல்கள் ரொம்பவே மோசம். இவை பல நேரங்களில் இரு தரப்பிற்கும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இது காதல் ஜோடிகளுக்கு இடையே சண்டையை மட்டும் ஏற்படுத்துவதில்லை. பொஸசிவ்னஸ் காரணமாக அவர்கள் செய்யும் செயல் அவர்களுக்கும் சரி, சுற்றி இருப்பவர்களுக்கும் சரி ஆபத்தைத் தருவதாக மாறுகிறது.

 பற்றி எரிந்த வீடு

பற்றி எரிந்த வீடு

அப்படியொரு கமெடி கலட்டா சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்து உள்ளது. அங்குள்ள டெக்சாஸ் மக்கானதைச் சேர்ந்த இளம் பெண் பொஸசிவ்னஸ் காரணமாகத் தனது காதலனின் வீட்டையே ஒட்டுமொத்தமாக எரித்து சாம்பலாக்கி உள்ளார். அவர் எதற்காக இப்படியொரு கொடூர செயலில் ஈடுபட்டார் என்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டால், நிச்சயம் நீங்களே மிரண்டு போய்விடுவீர்கள். அந்த 23 வயது இளம் பெண் ஏன் இப்படிச் செய்தார் எனக் கேட்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.

 தீ வைத்த மேரி

தீ வைத்த மேரி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண் செனைடா மேரி சோட்டோ. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை 2 மணிக்கு முன்னதாக தனது காதலனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளாள். வீட்டிலிருந்த பல பொருட்களைத் திருடிய அந்த பெண், பின்னர் காதலனின் வீட்டிற்குத் தீ வைத்ததாக போலீசார் கூறுகின்றனர். மேரி சோட்டோ கொள்ளை மற்றும் தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 வீடியோ கால்

வீடியோ கால்

இது குறித்து போலீசார் மேலும் கூறுகையில், "மேரியும் அந்த இளைஞரும் நீண்ட காலமாகக் காதலித்து வந்து உள்ளனர். இதில் மேரிக்கு தனது காதலன் மீது அதிக பொஸசிவ்னஸ் இருந்து உள்ளது. இருப்பினும், அவர்கள் உறவில் எந்தவொரு பெரிய பிரச்சினையும் இல்லாமலேயே இருந்து உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலனுக்கு மேரி வீடியோ கால் செய்துள்ளார். அப்போது வேறு ஒரு பெண் போனை எடுத்து பேசிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த காதலி மேரி இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டு உள்ளார்.

சிசிடிவி

சிசிடிவி

தனது காதலன் தன்னை ஏமாற்றிவிட்டு, வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக நினைத்து மேரி இந்தச் செயலில் ஈடுபட்டு உள்ளார். உண்மையில் மேரி கால் செய்த போது அதை எடுத்துப் பேசியது அந்த பையனின் உறவினர் தான்" என்றார். வேறு ஒரு பெண் ஃபோனை எடுத்துப் பேசியதால் ஆத்திரமடைந்த மேரி, அத்துமீறி நுழைந்து காதலனின் வீட்டிற்கு தீ வைத்து உள்ளார். அவர் தீ வைத்து அதை வீடு முழுக்க பரப்பச் செய்த செயல்களும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் அப்படியே பதிவாகி உள்ளது.

 ஆவேச சிரிப்பு

ஆவேச சிரிப்பு

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேரி செய்த செயலில் சுமார் $ 50,000 மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்து உள்ளது.. காதலனின் வீட்டில் தீயைப் பற்ற வைத்த பிறகு, அங்கிருந்தபடி காதலனுக்கு மீண்டும் வீடியோ கால் செய்த மேரி, வீடு தீயில் எரிவதைக் காதலனுக்குக் காட்டியுள்ளார். அப்போதும் கோபம் தீராமல் காதலனிடம் கத்திய மேரி, உடைமைகள் எல்லாம் நிச்சயம் எரிந்து சம்பலாகிவிடும் என்று கூறி ஆவேசமாகச் சிரித்து உள்ளார்.

 டாக்ஸிக் உறவு

டாக்ஸிக் உறவு

இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. டெல்லியில் இதுபோலத் தான் காதல் என்ற பெயரில் டாக்ஸிக் உறவில் இருந்த சாரதா என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் கொலை செய்தான். அது மட்டுமின்றி கொலை மறைக்க உடலை 35 துண்டுகளாக வெட்டி, வீட்டிலேயே பிரிட்ஜில் வைத்து இருந்தான். பின்னர், அதை மெல்ல அடுத்து சில வாரங்களில் டெல்லியில் இருந்த பல்வேறு இடங்களில் தூக்கிப் போட்டிருந்தான்.

 கொடூர கொலை

கொடூர கொலை

காதலியைக் கொன்றுள்ளோம் என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல், சாரதாவின் சடலம் வீட்டில் இருக்கும்போதே, அவன் மற்ற பெண்களையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான். இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில் தான், அமெரிக்காவிலும் டாக்ஸிக்கான உறவால் இளம் பெண் தனது காதலன் மீது சந்தேகம் கொண்டு வீட்டையே எரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+