பயோ ஆயுதங்கள், உலக தலைவர் கொலை முயற்சி.. 2024இல் என்ன தான் நடக்கும்! பாபா வாங்கா பகீர் கணிப்புகள்
வாஷிங்டன்: வரும் காலம் குறித்து துல்லியமான கணிப்புகளை விட்டுச் செல்லும் பாபா வாங்கா அடுத்தாண்டு என்ன நடக்கும் என்பது குறித்து விட்டுச் சென்றுள்ள கணிப்புகள் குறித்துப் பார்க்கலாம்.
நமது வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதுவே நமது வாழ்க்கை சுவாரசியமானதாக மாற்றுகிறது. அதேநேரம் இங்கே எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் பலருக்கும் இருக்கிறது.

எதிர்காலம் குறித்து அப்படி துல்லியமாகக் கணித்தவர்களில் முக்கியமானவர் பாபா வாங்கா.. ஒட்டமான் பேரரசில் 1911 பிறந்த இவரது இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா.. இவர் வரும் காலம் குறித்துப் பல கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார்.
பாபா வாங்கா: இவருக்கு 12 வயதாகும் போது மின்னல் தாக்கியதில் பார்வையை இழந்தார். கண் பார்வை போனாலும் கூட அப்போது தான் இவர் எதிர்காலத்தைப் பார்க்கும் சக்தியைப் பெற்றதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இவரது கணிப்புகள் எல்லாம் துல்லியமாக இருப்பதே இவரை மற்றவர்களிடம் இருந்து தனித்துக் காட்டுகிறது. 1996இல் மறைந்த இவர் அதற்கு முன்பு வருடம் வாரியாக பல கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார்.
சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய பல நிகழ்வுகள் இவர் முன்பே கணித்ததாகும். இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியனின் வீழ்ச்சி என்று இவர் கணித்த ஒவ்வொன்றும் உலக அரசியலையே மாற்றி விஷயங்கள் ஆகும். இதற்கிடையே அடுத்தாண்டு, அதாவது 2024இல் அவர் என்னவெல்லாம் நடக்கும் எனக் கணித்துள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற கணிப்புகள் பெரும்பாலும் அவர் படைப்புகளில் இருந்து மற்றவர்கள் கூறுவது என்பதால் இதை உறுதி செய்வது கடினம்.
கணிப்புகள்: ஆஸ்ட்ரோஃபேம் வெளியிட்ட தகவல்களின்படி 2024ஆம் ஆண்டிற்குப் பாபா வாங்கா 7 முக்கிய கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். அவை அனைத்துமே உலக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.
அடுத்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சி நடக்கும். இது பெரும்பாலும் அண்டை நாட்டால் மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே இருக்கும்.
ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், அங்குள்ள ஒரு முக்கிய நாடு அடுத்த ஆண்டு பயோ ஆயுதங்களைச் சோதனை செய்யும்... அல்லது அதை வைத்துத் தாக்குதல் நடத்தும் என்று கணித்துள்ளார்.
அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தை மொத்தமாகப் பாதிக்கும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி இருக்கும் என்று குறிப்பிட்டார். அதிகரிக்கும் கடன் வரம்புகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் இதற்குக் காரணமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடக்கும்: அடுத்த ஆண்டு பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
சைபர் தாக்குதல்கள் அடுத்தாண்டு உலகெங்கும் அதிகரிக்கும் என்று பாபா வாங்கா கூறியுள்ளார். ஹேக்கர்கள் பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பைக் குறிவைப்பார்கள் என்றும் இது தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
அல்சைமர், புற்றுநோய் உள்ளிட்ட குணப்படுத்த முடியாத நோய்களுக்கு அடுத்தாண்டு புதிய சிகிச்சை முறை வரும் என்பதையும் அவர் கணித்துள்ளார்,
குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் ஒரு பெரிய திருப்புமுனை இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்
இதுவரை அவரது கணிப்புகள் பெரும்பாலும் அப்படியே நடந்திருக்கும் நிலையில், இதுவும் அப்படியே நடக்கும் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு நமக்கு உறுதியான பதில் கிடைக்க நாம் அடுத்தாண்டு வரை காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications