அமெரிக்க, கனடாவில் பறக்கும் மர்ம பொருட்கள்.. மொத்தம் 400+ சம்பவங்களாம்.. யுஎஃப்ஓக்கள் என்றால் என்ன
அமெரிக்கா, கனடா பகுதிகளில் கண்டறியப்படும் யுஎஃப்ஓக்கள் பறக்கும் சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்: அடுத்தடுத்து இரு நாட்கள் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இந்த யுஎஃப்ஓ என்றால் என்ன.. இதில் பூமிக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா என்பதைப் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவும் அதன் வான்வெளியிலும் தான் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. முதலில் கடந்த வாரம் அமெரிக்கா மீது சீனாவின் பலூன் ஒன்று பறந்து சென்றது. சீனா இதை வானிலை தொடர்பான பலூன் என்றே கூறியது.
இருப்பினும், அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளவாடங்கள் இருக்கும் பகுதிகளில் இந்த பலூன்கள் பறந்ததாகவும் இது உளவு பலூனாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்றது. இந்த பலூன்கள் குறித்து தொடர்ச்சியாக அமெரிக்க ராணுவம் கண்காணித்து வந்தது.

அமெரிக்கா
இதையடுத்து அந்த பலூனை அமெரிக்கச் சுட்டு வீழ்த்தியது. இந்த பரபரப்பு ஓய்வதற்குள்ள அடுத்தடுத்து மர்ம சம்பவங்கள் அங்கு நடைபெறத் தொடங்கியுள்ளன. நேற்று தான், அமெரிக்காவின் அலாஸ்கா மீது பறந்து சென்ற மர்மப் பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அந்த பொருள், கார் அளவில் இருந்ததாகவும் வேகமாகப் பறந்த அந்த பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதியே அந்த பொருள் அமெரிக்க ரேடாரில் பதிவாகத் தொடங்கிவிட்டதாம். 40,000 அடி உயரத்தில் பறந்த அந்த மர்மப் பொருளை இப்போது சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

ஆய்வு
அது என்ன மாதிரியான பொருள் என்பது இன்னுமே கூட நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அது எங்கிருந்து வந்தது.. அதன் உரிமையாளர் யார்.. அது என்ன செய்து கொண்டிருந்தது என்று எதற்கும் நமக்கு விடை கிடைக்கவில்லை. சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த மர்மப் பொருளின் பாகங்களை எடுத்து ஆய்வு செய்யும் முயற்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், அடுத்தவொரு பரபர சம்பவம் நடந்துள்ளது. நேற்று எப்படி அமெரிக்க வான்வழியில் மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டதோ.. அதேபோல இன்று கனடாவில் மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

கனடா
கனடா வான்வளியில் பறந்த அந்த மர்ம பொருள் அமெரிக்க மற்றும் கனடா ராணுவங்கள் இணைந்து சுட்டு வீழ்த்தியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவின்படி கனடா - அமெரிக்கா ராணுவங்கள் இணைந்து இந்த பணிகளைச் செய்ததுள்ளன. அதேநேரம் இது குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.. கீழே விழுந்து கிடக்கும் மர்மப் பொருளின் பாகங்கள் சேகரிக்கும் நடவடிக்கையை இப்போது இரு நாட்டு ராணுவமும் தொடங்கியுள்ளது. இந்த பொருட்களை வைத்து ஆய்வு செய்யவும் ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

யுஎஃப்ஓ
இரண்டு நாட்களில் இரண்டு மர்ம பொருட்களை அமெரிக்கா ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரி இந்த யுஎஃப்ஓ என்றால் என்ன.. இதனால் எதாவது பாதிப்பு ஏற்படுமா என்பதைப் பார்க்கலாம்.. UFO என்றால் Unidentified flying object ஆகும்.. அதாவது என்னவென்றே தெரியாத பறக்கும் பொருள் என்பதை இதற்கு அர்த்தம். வானத்தில் பறக்கும் இந்த மர்ம பொருளைத் தான் இப்போது அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. கடந்த காலங்களிலும் பல முறை இதுபோன்ற மர்மப் பொருட்களை வானில் பார்த்துள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

60 ஆண்டுகளுக்கு முன்பு
1561ஆம் ஆண்டு முதலே இதுபோன்ற மர்ம பொருட்களை வானில் பார்ப்பதாக மக்கள் கூறி வந்துள்ளனர். குறிப்பாக, விமானங்களின் வருகைக்குப் பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 1947இல் இது அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டது. அடுத்தாண்டு ஜூன் 24ஆம் தேதி கென்னத் அர்னால்ட் என்ற பைலட் அமெரிக்காவில் மவுண்ட் ரெய்னர் அருகே 9 மர்ம பொருட்கள் வரிசையாகப் பறப்பதைப் பார்ப்பதாகக் கூறினார். அது பார்க்க ஒரு தட்டு போல இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதை ஊடகங்கள் பறக்கும் தட்டுகள் என்ற பெயரில் செய்திகளை வெளியிடத் தொடங்கின. இதில் இருந்தே யுஎஃப்ஒ மோகம் உலகெங்கும் தொடங்கியது.

400+ சம்பவங்கள்
அப்போது தொடங்கிக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூமியில் இந்த பறக்கும் தட்டுகள் குறித்த மர்மம் நீட்டித்து வருகிறது. இந்த பறக்கும் தட்டுக்கள் மூலம் ஏலியன்களே பூமிக்கு வருவதாக கூறப்படுகிறது.. கடந்த 1945ஆம் ஆண்டு முதல் இந்தச் சம்பவங்களை அமெரிக்கா தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. இதுவரை மொத்தம் 400க்கும் மேற்பட்ட பறக்கும் தட்டுக்கள் சம்பவங்களை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. பெரும்பாலான கேஸ்களில் பெரிய காற்றழுத்த பலூனுக்கு போன்ற அமைப்புகளையே பார்த்துள்ளனர். அது தவிரக் கூடுதலாக இது தொடர்பாக எந்தவொரு தகவல்களும் நம்மிடம் இல்லை..

அமெரிக்கா ஆய்வு
பெரும்பாலும் இவை ஏலியன்களின் வருகையை உணர்த்துவதாகவே இருக்கும் என்ற கருத்து பொதுப் புத்தியில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த பறக்கும் தட்டுகள் குறித்து மட்டும் தனியாக ஆய்வு செய்ய அமெரிக்கா பாதுகாப்புத் துறையான பென்டகன் தனியாக ஒரு துறையை அமைத்திருந்தது. அவர்கள் இத்தனை ஆண்டுகளாகப் பறக்கும் தட்டுகள் குறித்துப் பதிவு செய்யப்பட்ட தகவல்களை ஆய்வு செய்து வந்தனர். இந்தச் சூழலில் தான் அடுத்தடுத்து இரு பறக்கும் தட்டுக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
-
ஈராக்கில் விழுந்து வெடித்த அமெரிக்க விமானம்.. வேலையை காட்டிய ஈரான்! என்ன நடக்குது? -
2 வாரம்தான் ஆச்சு.. அதுக்குள்ள காலியான அமெரிக்க ஆயுதங்கள்! ஸ்மார்ட்டாக விளையாடிய ஈரான்! -
ஈரான் எழுந்திருக்கவே முடியாது.. இதயத்தில் இடி இறக்கிய இஸ்ரேல்! தன் பங்குக்கு போட்டு தாக்கும் டிரம்ப் -
அமெரிக்க தாக்குதலில் பலியான ஈரான் பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு.. சீனா ரூ.1.6 கோடி நிதியுதவி -
ஈரான் போரில் வீழ்ந்த 4-வது அமெரிக்க விமானம்.. ஈராக்கில் அமெரிக்க விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? -
வரலாறு காணாத தாக்குதல்.. ஈரான் வலுவிழந்ததா? அமெரிக்க உளவுத்துறை கொடுத்த நெகட்டிவ் ரிப்போர்ட் -
படிச்சு, படிச்சு சொன்ன பென்டகன்.. சுத்தமா கேட்கலையே டிரம்ப்! இப்போ பாருங்க.. சொன்னபடியே ஆயிடுச்சு! -
92,00,00,000 ரூபாய் பரிசு.. கமேனி மகன் தலைக்கு விலை வைத்த அமெரிக்கா! கண் சிவந்த நெதன்யாகு! பரபர! -
ஈரானின் எரிபொருள் இதயத்திலேயே கை வைத்த டிரம்ப்.. கார்க் தீவிலேய களம் இறங்கிய அமெரிக்கா -
ஈரான் போரால் அமெரிக்காவிற்கு என்ன லாபம்.. டிரம்ப்பின் நிஜமான நோக்கம் என்ன.. முழு பின்னணி -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு!












Click it and Unblock the Notifications