Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8.09 பில்லியனை தொடும் மக்கள்தொகை! உலகளவில் இந்தியா முதலிடம்! அடுத்தடுத்த இடங்களில் சீனா, அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: 2025ம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டு தினமான இன்று உலக மக்கள்தொகை 8.09 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.அதேபோல் உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சீனா 2வது இடத்திலும், அமெரிக்கா 3வது இடத்திலும் உள்ளதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

US Census Bureau எனும் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் என்பது அமெரிக்காவின் கூட்டாச்சி புள்ளியியல் அமைப்பின் முதன்மை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு என்பது அமெரிக்க மக்கள் மற்றும் அவர்களின் பொருளாதாரம் குறித்த தரவுகளை தயாரித்து வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

world population international india

இந்நிலையில் தான் 2025ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இந்த ஆங்கில புத்தாண்டையொட்டி தான் உலக மக்கள்தொகை குறித்த முக்கிய விபரங்களை இந்த அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உலக மக்கள்தொகை என்பது 2025 ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 8.09 பில்லியனை எட்டும். அதாவது ஒரு பில்லியன் என்பது 100 கோடி. அப்படியென்றால் உலக மக்கள்தொகை என்பது 800 கோடியே 9 லட்சம் என்ற அளவில் இருக்கும். புரியும்படி கூற வேண்டும் என்றால் 8,092,034,511 என்ற அளவில் மக்கள் தொகை என்பது இருக்கும்.

இது கடந்த 2024ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை ஒப்பிடும்போது 71 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் அப்படியென்றால் 71 மில்லியன் என்பது 7.10 கோடியாகும்) அதிகமாகும். மேலும் உலகம் முழுவதும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் பிறப்பு சதவீதம் என்பது 4.2 என்ற அளவிலும், இறப்பு சதவீதம் என்பது 2.0 என்ற அளவிலும் இருக்கும்.

மேலும் உலகளவில் மக்கள்தொகையில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2024 ஜுலை மாத நிலவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை என்பது 141 கோடியாகும். இதற்கு அடுத்தப்படியாக சீனா 2ம் இடத்தில் உள்ளது. சீனாவின் மக்கள்தொகை என்பது 140.8 கோடியாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3ம் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவின் மக்கள்தொகை என்பது 34 கோடியே 11 லட்சத்து 45 ஆயிரத்து 670 என்ற அளவில் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மக்கள்தொகை என்பது 34 கோடியே 11 லட்சத்து 45 ஆயிரத்து 670 என்று இருந்தது. அமெரிக்காவில் 2024ம் ஆண்டில் மட்டும் 2.6 மில்லியன் அதாவது 26 லட்சம் என்ற அளவில் மக்கள்தொகை உயர்ந்துள்ளது. 2025 ஜனவரியை பொறுத்தவரை அமெரிக்காவின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதமும் தற்போது கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 2025 ஜனவரி மாதம் அமெரிக்காவில் ஒவ்வொர 9 செகண்ட்டுக்கும் ஒரு குழந்தை பிறக்கும். ஒவ்வொரு 9.4 செகண்ட்டுக்கும் ஒருவர் இறக்கும் சர்வதேச அளவில் நடக்கும் இடம்பெயர்வு அடிப்படையில் பார்த்தால் ஒவ்வொரு 23.2 செகண்ட்டுக்கும் அமெரிக்க மக்கள்தொகையில் ஒருவர் சேர்க்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+