சாமானிய மக்களில் ஒருவராக திரையில் தோன்றிய ரஜினி.. ரசிகர்கள் கொண்டாடிய அந்த 6 படங்கள்.. என்னென்ன?
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. 1993ல் வெளிவந்த 'உழைப்பாளி' படத்தில் கூலி தொழிலாளியாக ரஜினி நடித்திருக்கும் கதாபாத்திரத்தை இன்ஸபிரேஷனாக வைத்து இயக்குநர் லோகேஷ் 'கூலி' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திலும் கூலி தொழிலாளியாக ரஜினி நடித்துள்ளார் என்பது ரசிகர்களின் கணிப்பாக உள்ளது. சாமானிய மக்களின் ஹீரோவாக ரஜினி உருவெடுத்ததற்கு அவர் தேர்ந்தெடுக்கும் சாமானிய கதாபாத்திரமே காரணம். சாமானிய மக்களின் கஷ்டத்தை சொல்லும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் சாமானிய மக்களில் ஒருவராக திரையில் தோன்றிய ரஜினி திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ரஜினி, ரோஜா நடிப்பில் 1993ல் வெளிவந்த திரைப்படம் 'உழைப்பாளி'. ஒரு பெரிய தொழிற்சாலையில் மூட்டை தூக்கும் உழைப்பாளியாக ரஜினி நடித்திருப்பர். சாமானிய மக்களில் ஒருவராக நடித்த இப்படம் மெகா ஹிட்டானது. இப்படத்தை யூடியூப் தளத்தில் காணலாம்.
சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி, சௌந்தர்யா, ரம்பா நடிப்பில் 1997ல் வெளிவந்த திரைப்படம் 'அருணாச்சலம்'. தான் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவன் என்ற உண்மை தெரிந்த பின்னர் உண்மையான அப்பா அம்மாவை தேடி சென்னை வரும் ரஜினி, 30 நாட்களில் 3000 கோடியை செலவு செய்து மீண்டும் சாமானிய மக்களில் ஒருவராக மாறுவது ரசிகர்களை அதிகம் இம்ப்ரெஸ் செய்தது. இப்படத்தை யூடியூப் தளத்தில் காணலாம்.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, குஷ்பூ நடிப்பில் 1992ல் வெளிவந்த திரைப்படம் 'அண்ணாமலை'. பால் வியாபாரம் செய்யும் தொழிலதியாக ரஜினி நடித்திருப்பார். நண்பன் செய்த துரோகத்தில் அனைத்தையும் இழந்த ரஜினி, மீண்டும் மிக பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவார். இப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, நக்மா நடிப்பில் 1995ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'பாட்ஷா'. சாமானிய மக்களில் ஒருவராக ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். எடுத்துக்காட்டில் டானாக இருந்தாலும் ஆட்டோ ஓட்டுநர் ரஜினியை ரசிகர்கள் அதிகம் லைக் செய்தனர். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட் தளத்தில் காணலாம்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா நடிப்பில் 1994ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'முத்து'. ஜமீன்தாருக்கு குதிரை வண்டி ஓட்டும் வேலைக்காரனாக ரஜினி நடித்திருப்பார். பின்னர் தான் ஒரு உண்மையான ஜமீன்தார் என்ற உண்மை வெளிவர அப்போது சாமானிய மக்களில் ஒருவராக இருக்க ஆசைப்படுவார். இப்படத்தை அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட் தளத்தில் காணலாம்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2007ல் வெளிவந்த திரைப்படம் 'சிவாஜி'. கோடீஸ்வரரான ரஜினி, மக்களுக்கு நல்லது செய்ய ஆசைப்பட்டு அனைத்தயும் இழந்து நடுரோட்டில் நிற்பார், இருந்தும் மீண்டும் அனைத்தும் மீட்டுகொண்டுவந்து ஏழை மக்களுக்கு உதவவேண்டும் என்று ஆசைப்படுவர். இந்த கதாபாத்திரம் இவரை சாமானிய மக்களில் ஒருவராக மாற்றியது. இப்படத்தை அமேசான் பிரைம், ஜீ5, எம்எக்ஸ் பிளேயர் தளத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications