Home / Photos
PHOTOS: மெல்லிய மீசை.. பெரிய கண்ணாடி! என்னாச்சு இவருக்கு? புது கெட்டப்பில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி!
By Chandru
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி யாரும் எதிர்பார்த்திடாத வித்தியாசமான லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி யாரும் எதிர்பார்த்திடாத வித்தியாசமான லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்ஸா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக மக்கள் மத்தியில் பரிட்சியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. இப்படத்திற்கு முன் பல படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் தான் விஜய் சேதுபதி யார் என்பதை காட்டியது. தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வர தொடங்கினார்.
3/7
Photo Credit: instagram
Share
விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பு, பேச்சு உள்ளிட்டவை சினிமா ரசிகர்களை ஈர்க்க 'மக்கள் செல்வன்' என்ற படத்தை மக்கள் அன்போடு வழங்கினர். திரைப்படங்களில் கூட்டத்தில் ஒருவனாக நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4/7
Photo Credit: instagram
Share
ஹீரோவாக பல படங்களில் நடித்து மெர்சல் காட்டி வந்த விஜய் சேதுபதி சமீப காலமாக வில்லனாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். விக்ரம் வேதா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். ஹீரோ மட்டும்மல்ல வில்லனாகவும் என்னால் நடிக்கமுடியும் என்பதை நிரூபித்தார்.
5/7
Photo Credit: instagram
Share
அதன்பின்னர் விஜய்யுடன் மாஸ்டர், கமலுடன் விக்ரம், சூரியுடன் விடுதலை, ஷாருக்கானின் ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பக்கா வில்லன் நடிகராகவே மாறிவிட்டார். விஜய் சேதுபதியை ஹீரோவாக பார்ப்பதை விட வில்லனாக பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர் என்றே சொல்லலாம்.
6/7
Share
தற்போது கையில் 4, 5 படங்களுடன் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி, இயக்குநர் அமீர் புதிதாக ஓபன் செய்த உணவகத்தின் திறப்பு விழாவுக்கு கெஸ்டாக வந்திருந்தார். இந்த நிலையில் மெல்லிய மீசை, பெரிய கண்ணாடி என்று வித்தியாசமான கெட்டப்பில் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
7/7
Share
ஆமாம் எதுக்கு இந்த வித்தியாசமான கெட்டப் என்று பார்த்தால், தற்போது மகாராஜா என்ற படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருவதினால் இந்த வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார் என்று கூறுகின்றனர். தற்போது விஜய் சேதுபதி புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications