Home / Photos
லெஹங்காவில் வசீகரிக்கும் அழகில்.. விஜய் ஆண்டனி பட நாயகியின் ரீசென்ட் போட்டோஸ்!
By Divya Bala
நடிகை பிரிகிடா தமிழ், தெலுங்கு என வளர்ந்து வரும் நடிகையாகும். யூடியூபில் வெளியான வெப் தொடர் மூலம் பிரபலமானவர் பிரிகிடா. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/7
Share
பிளாக்ஷீப் யூடுப் சேனலில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் பவித்ரா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பவி டீச்சர் என்று அந்த தொடர் மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் கூட தொடங்கியது.
2/7
Share
மேலும் யூடுப்பில் பல குறும்படங்களில் நடித்தார். பிரிகிடா அவளோடு அவன், கண் பேசும் வார்த்தைகள், மற்றும் தோள் காடு போன்ற சில குறும்படங்களில் நடித்தார். அதன் மூலம் அவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
3/7
Share
அதன் வெளிப்பாடாக அயோக்கியா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகர் விஷால் நடிப்பில் வெளியான இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான வர்மா படத்தில் நடித்தார்.
4/7
Share
மாஸ்டர் படத்தில் விஜய் உடன் நடித்தார். அதன் பிறகு பிக்பாஸ் மூலம் பிரபலமான முகேன் ராவ் நடிப்பில் வெளியான வேளாண் படத்தில் பவித்ரா கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் பார்த்திபன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
5/7
Share
இந்த படத்தில் இவரது தைரியமான நடிப்பால் பலரும் இவரை பாராட்டினார்கள். மேலும் அவருக்கும் தெலுங்கில் இரண்டு படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வரிசையாக படங்களில் நடித்துவரும் பிரிகிடா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
6/7
Share
சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கோழிப்பண்ணை செல்லத்துரை படங்களில் நடித்துவரும் பிரிகிடா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
7/7
Share
இவர் தற்போது ஹாட்ஸ்பாட் 2 படத்திலும் கமிட் ஆகி உள்ளார். மேலும் விஜய் ஆண்டனி படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications