மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ‘தடக்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்த இவர், ‘தேவரா’ மூலம் தெலுங்கு சினிமாவிலும் கவனம் பெற்றார்.
தற்போது ராம் சரண் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாலிவுட் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் கலக்கி வரும் ஜான்வி, கேன்ஸ் திரைப்பட விழாவில் மாடர்ன் லுக்கில் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.