Home / Photos
சுந்தர் சி-யின் 'தலைநகரம்' பட ஹீரோயினை நியாபகம் இருக்கா? தலைமுடி நரைத்து ஆளே மாறிட்டாங்களே!
By Chandru
நடிகர் சுந்தர் சி-யின் 'தலைநகரம்' பட ஹீரோயினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு செம்ம ஷாக் கொடுத்து வைரலாகியுள்ளது.
1/9
Share
80ஸ் மற்றும் 90ஸ் நடிகைகளின் சமீபத்திய புகைப்படங்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள், எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல்களை தேடி பிடித்து பார்த்துவருகிறோம். அந்தவகையில் தற்போது தலைநகரம் பட ஹீரோயினின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
2/9
Share
மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஜோதிர்மயி. மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தனது அசத்தலான நடிப்பினை வெளிக்காட்டியதன் மூலம் சிறந்த துணை நடிகை, சிறந்த நடிகை உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.
3/9
Share
தமிழ் மக்கள் பெரும்பாலானோருக்கு ஜோதிர்மயி-யை நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர் நடித்த படத்தை சொன்னால் உடனே காப்பென பிடித்துக்கொள்வார்கள். அதன்படி இயக்குநர், நடிகர் சுந்தர் சி நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான படம் தலைநகரம்.
4/9
Share
இப்படத்தில் சுந்தர் சி-க்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஜோதிர்மயி. இப்படத்தில் வரும் வடிவேலுவின் காமெடி ஒவ்வொன்றும் இன்றும் அனைவரையும் சிரிக்கவைத்து வருகிறது. அதிலும் வடிவேலுவின் நாய் சேகர் கதாபத்திரத்தையும், பெயரையும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் மக்கள் மறக்கமாட்டார்கள்.
5/9
Share
இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜோதிர்மயி-யையும் இளைஞர்கள் நோட் செய்ய ஆரம்பித்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. அந்தவகையில் விஜயகாந்தின் சபரி, நான் அவன் இல்லை, பெரியார், அறை என் 305ல் கடவுள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
6/9
Share
தொடர்ந்து தமிழ் படங்கள் கிடைத்தாலும் இவருக்கு மலையாளத்தில் தான் அதிக பட வாய்ப்பு கிடைத்து. தமிழ், மலையாளம் படங்களை தொடர்ந்து சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் ஸ்டார் நடிகையாக இருக்கும்போதே ஜோதிர்மயி திருமண வாழ்க்கைக்குள் ஐக்கியமாகிவிட்டார்.
7/9
Share
கடந்த 2004ம் ஆண்டு நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் செம்ம பிஸியாக நடித்து வந்த ஜோதிர்மயி, 2010ம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். விவாகரத்துக்கு பின் தனிமையில் இருந்த இவர் 2015ல் மலையாள இயக்குநர் அமல் நீரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
8/9
Share
இப்படியாக திருமண வாழ்க்கையையும், சினிமா வாழ்க்கையையும் பேலன்ஸ் செய்துகொண்டு பிஸியாக இருந்த ஜோதிர்மயி 2013ம் ஆண்டுக்கு பின் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிக்கொண்டார். சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வரும் ஜோதிர்மயி-யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் கொடுத்துள்ளது.
9/9
Share
மாநகரம் படத்தில் செம்ம அழகாக இருந்த ஜோதிர்மயி, தற்போது தலைமுடி நரைத்து ஆளே மாறிப்போய் ரசிகர்களுக்கு செம்ம அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications