Home / Photos
PHOTOS: விஜய்யின் 'காவலன்' பட நடிகை நீபவை நியாபகம் இருக்கா? மிரள வைக்கும் போட்டோஸ்!
By Chandru
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை நீபா. தனது அசத்தலான நடந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை இடம் பிடித்தார்.
1/7
Photo Credit: instagram
Share
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை நீபா. தனது அசத்தலான நடனத்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
2/7
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான கவியஞ்சலி சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பின்னர் பல்வேறு சீரியல் தொடர்களில் நடித்து முக்கிய சீரியல் நடிகைகளில் ஒருவராக வலம் வர தொடங்கினார். சீரியலில் பிஸியாக இருந்தாலும் நடன நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்று வந்தார்.
3/7
Photo Credit: instagram
Share
சீரியல் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட நீபாவுக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய் நடிப்பில் வெளியான காவலன் திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். மேலும் இப்படம் இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது.
4/7
Photo Credit: instagram
Share
விஜய்யின் காவலன் படத்தை தொடர்ந்து பெருசு, பள்ளிக்கூடம், தோட்டா, கண்ணும் கண்ணும், அம்முவாகிய நான் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படங்களை காட்டிலும் சின்னத்திரை சீரியல் மூலமாக தான் நீபா அனைவராலும் அறியப்பட்டார்.
5/7
Photo Credit: instagram
Share
சின்னத்திரை, வெள்ளித்திரை, டான்ஸ் என்று செம பிஸியாக இருந்த நீபா கடந்த 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் சிவகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
6/7
Photo Credit: instagram
Share
திருமணத்திற்கு பின் திரைப்படங்களை காட்டிலும் சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சீரியல் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொருபக்கம் விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொண்டு வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
தனது திரை பயணத்தில் மிகவும் பிஸியாக இருக்கும் நீபா, சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் நீபா சமீபத்தில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். தற்போது நீப்பாவின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications